Category: You Are That!
-
You Are That! – “unchangeable name posser”
ஊரெலாம் கூடி ஒலிக்க அழுதிட்டுப் பேரினை நீக்கிப் பிணமென்று பேரிட்டுச் சூரையங் காட்டிடைக் கொண்டுபோய்ச் சுட்டிட்டு நீரினில் மூழ்கி நினைப்பொழிந் தார்களே. திருமூலரின் திருமந்திரம்:145 விளக்கவுரை : எந்த மனித உருவை அது பிறந்த போது அதை அழைப்பதற்காக, இறைவனின் திருநாமங்களில் ஒன்றினையே தேர்ந்தெடுத்து, அஃதினையே பிறந்த அம்மனித உருவின் பெயராக சூட்டி ஊரெல்லாம் கூடி ஒலித்தார்களோ… அவ்வூரார்களே அம்மனித உருவை விட்டு உயிர் நீங்கினால், ஒன்றுகூடி ஒலிக்க அழுதிட்டு இறக்கும் முன் வரை தாங்களே பேரிட்டு…
