Category: spirituality
-
“(வாசி) குதிரைகளை வீசிப்பிடி”
வாசி யோகத்தை பற்றி திருமூலர் சொன்ன குறிப்பு ஒன்றைஇங்கு காண்போம், “ஆரிய னல்லன் குதிரை இரண்டுள வீசிப் பிடிக்கும் விரகறி வாரில்லை கூரிய நாதன் குருவின் அருள்பெற்றால் வாரிப் பிடிக்க வசப்படுந் தானே” என்பது திருமூலரின் திருமந்திரம் ஆரிய னல்லன் குதிரை இரண்டுள: ஆரி: என்பதற்கு கதவு என்று பொருள் உள்ளது. அதாவது கதவே இல்லாத திறந்த வாயில் போன்று விளங்கிக் கொண்டிருக்கும் ஒவ்வொரு மனிதர்களின் இரண்டு நாசி துவாரங்கள் வழியே, குதிரைகளைப் போன்று, உள்மூச்சும்,…
