Category: immortality
-
திருமூலர் திருமந்திரம் உரை எண் 162 ன் விளக்கம்:
ஶ்ரீ குருப்யோ நமஹ ,🙏 “கூடம் கிடந்தது கோலங்கள் இங்கில்லைஆடும் இலையமும் அற்றது அறுதலும் பாடுகின் றார்சிலர் பண்ணில் அழுதிட்டுத்தேடிய தீயினில் தீயைவைத் தார்களே.” ஆடும் இலையமும்: தாவரங்களின் இலைகளின் அசைவில் இருந்து வெளிப்படும் பிராணவாயுவை, வாசியாக, சிவமாக ஆனால் அதை அறியாமலேயே, சுவாசமாக உட்கொண்டு உயிர் வாழ்ந்து கொண்டிருந்த மானுட கூட்டிற்கும், அதாவது உடம்பிற்கும், தாவரங்களின் ஆடும் இலையில் இருந்து வெளிப்படும் வாசியாகிய சிவத்திற்கும். இடையில் உள்ள சுவாசம் என்னும் உறவு அறுபட்டு, ஒன்றுமில்லாமல் போகும்போது……
