Category: சன்மார்க்கம்
-
“வள்ளலாரின் வழிபாட்டு முறை”
“வள்ளலாரின் வழிபாட்டு முறை”“பகுதி தகுதி விகுதிஎனும் பாட்டில்இகலில் இடையை இரட்டித் – தகவின்அர்ச்சித்தால் முன்னாம் அதுகடையாம் கண்டீர் முன்னாம் அதுகடையாம் கண்டீர்திருச்சிற் சபையானைத் தேர்ந்து.” இப்பாடல் வள்ளல் பெருமானால் இயற்றப்பட்டு அது இரண்டாம் திருமுறையில் உள்ளது. “பகுதி, தகுதி, விகுதி” என்னும் சொற்களில் நடுவில் வரும் எழுத்தைக் கூட்டி இரட்டிப்பாக்கினால் வருவதைக் கொண்டு சிற்சபையானை (இறைவனை) அர்ச்சனை செய்தால், முதலில் வரும் எழுத்துகளைக் கூட்டியது உண்டாகி, கடைசி எழுத்துகளைக் கூட்டினால் வருவது கிடைக்கும், என்பது இதன் பொது…
