“உயிர்த்தெழுதல்”

“உயிர்த்தெழுதல்”
“அல்லாஹ்” தான் ஒருவனே , ஒவ்வொருவரின் உடல், மனம், புத்தி, பிராணன், பரவச நிலை, மற்றும் இவற்றால் உணரப்படும் உலகங்கள் ஆகிய எல்லாமாகவே இருக்கிறான், அவ்வாறு “அல்லாஹ்” எல்லாமாக இருந்தும், அந்த எல்லாவற்றாலும் அவன் உணரப்படாதவனாகவே, தனித்தவனாக, ஒவ்வொருவரின் ஆழ்ந்த உறக்க நிலையில் விளங்கிக் கொண்டிருக்கிறான்!

எனினும் அவன் ஒவ்வொருவரின் விழிப்பு நிலையில் அந்த எல்லாவற்றாலும் உணரப்படுபவனாக இருந்தாலும், அது தொடர்ந்த உணர்வாக இல்லாமல், அவ்வப்போது உணரப்படுபவனாக மட்டுமே இருப்பதால், அவன் உண்மையில் அறியப்படாதவனாகவே ஆகி விடுகிறான்.

அவ்வாறு இன்றி ஒருவன் தன் “அல்லாஹ்” யை, தம் விழிப்பு நிலையில், தம் எல்லாவற்றாலும், இடைவிடாது தொடர்ந்து உணரப்படும் போது, “அல்லாஹ்” எவ்வித முயற்சியும் இன்றி அவனது உறக்கத்திலும் தொடர்ந்து உணரப்படுபவனாக, தாமே ஆகி விடுகிறான். அதன் மூலம் அத்தகையவன் தன் உறக்கத்திலும், விழிப்பிலும் முறைமை வகிப்பவனாகி, சிறந்த யோகியாகி, உயிர்த்தெழுதலுக்கு பாத்திரமாகி விடுகிறான்.

எவ்வாறெனின், “நானே உயிர்த்தெழுதலும் ஜீவனுமாயிருக்கிறேன்” என்று யோவான் 11:25 ல் இயேசு கிறிஸ்து மார்த்தாளிடம் கூறிய சக்திவாய்ந்த வாக்குறுதியின் படி, அல்லாஹ்” தான் ஒருவனே, இவ்வாறு முறையாக விசுவாசம் கொள்பவர்களின் ஜீவனுமாகவும்,, உயிர்த்தெழுதலுமாகவும் அவனே விளங்கிக் கொண்டு இருப்பதால்!!

இதை கருப்பொருளாக கொண்ட நம்மாழ்வார் பாசுரம்:
‘அவனே அகல் ஞாலம் படைத்திடந்தான்
அவனே அஃது உண்டு உமிழ்ந்தான், அளந்தான்
அவனே யவனும் அவனும் அவனும்
அவனே மற்று எல்லாமும் அறிந்தனமே‘.
ஶ்ரீ குருப்யோ நமஹ 🙏

Leave a comment