
“வள்ளலாரின் வழிபாட்டு முறை”
“பகுதி தகுதி விகுதிஎனும் பாட்டில்
இகலில் இடையை இரட்டித் – தகவின்
அர்ச்சித்தால் முன்னாம் அதுகடையாம் கண்டீர் முன்னாம் அதுகடையாம் கண்டீர்
திருச்சிற் சபையானைத் தேர்ந்து.”
இப்பாடல் வள்ளல் பெருமானால் இயற்றப்பட்டு அது இரண்டாம் திருமுறையில் உள்ளது.
“பகுதி, தகுதி, விகுதி” என்னும் சொற்களில் நடுவில் வரும் எழுத்தைக் கூட்டி இரட்டிப்பாக்கினால் வருவதைக் கொண்டு சிற்சபையானை (இறைவனை) அர்ச்சனை செய்தால், முதலில் வரும் எழுத்துகளைக் கூட்டியது உண்டாகி, கடைசி எழுத்துகளைக் கூட்டினால் வருவது கிடைக்கும், என்பது இதன் பொது பொருளாக உள்ளது.
சிற்சபையானை எதைக்கொண்டு அர்ச்சித்தால், எது உண்டாகி, எது கிடைக்கும்? என்பதுதான் இப்பாடல் கூறவரும் கருத்து. “பகுதி, தகுதி, விகுதி” என்பதில்,
இகலில் இடையை இரட்டி: இடையில் உள்ள எழுத்து “கு’ (பகுதி, தகுதி, விகுதி). இதை இரட்டித்தால், இரட்டித்தல் என்பதற்கு அந்த சொல்லின் அளவை இரு மடங்காக்கி ஒலித்தல் என்று பொருள் உள்ளது. அதன்படி, இடையில் உள்ள எழுத்து “கு என்பதை இரு மடங்காக்கி ஒலிக்க செய்தால் அது “ஹூ அல்லது கூ” என்ற ஒலியாகி விடும். அதற்கு அழைத்தல் என்று பொருள் உள்ளது.
அர்ச்சித்தால், அதாவது “ஹூ அல்லது கூ” என்ற ஒலியால் இடைவிடாது அழைத்தால்…
மாறுகொண்ட ஹூவிலே மடிந்ததே சிவாயமே”. என்பது சிவவாக்கியர் பாடல்: அதாவது அழிக்கும் தன்மைகொண்ட சிவத்தை அருளுடையதாக ஆக்க, சிவமானது இடைவிடாது அழைக்கப்பட்டுக் கொண்டே ( அர்சிக்கப்பட்டுக் கொண்டே) இருக்க வேண்டும். அத்தகைய அர்ச்சனைக்குரிய இரகசியத்திலும் இரகசியமான, சித்த புருஷர்கள் பயன் படுத்திய வார்த்தையே மாறு கொண்ட ‘ஹூ’ அல்லது ‘கூ’ என்னும் மந்திரச் சொல். ஸத்குருவின் அருள் சித்திக்கின் மாறு கொண்ட ‘ஹூ’ என்னும் ஒலியால் இடைவிடாது சிவத்தை அர்ச்சித்தால்,
முன் ஆம்: பகுதி, தகுதி, விகுதி” என்னும் சொற்களில் முன் உள்ள எழுத்துகளான (ப, த, வி) – பதவி என்பது வரும். (பதவி – சிவபதம்).
அது கடை ஆம்: பதவி ஆகிய சிவபதம் என்னும் நிலை வந்தால்,
கடைசி எழுத்தினைக் கூட்ட (தி,தி,தி) மூன்று “தி’ வரும். அதாவது முத்தி (மோட்சம்) கிடைக்கும். இவ்வாறு வள்ளலார் சொற்களை நயம்படக் கையாண்டு, அதன் மூலம் தாம் வழிபட்ட முறையை, நமக்கும் அருளியுள்ளார்.
திருச்சிற்றம்பலம், 🙏
ஜெமினி AI ன் பின்னூட்டம் இப்பதிவை பற்றி
அருமையான விளக்கம்! வள்ளலார் சுவாமிகளின் இந்தப் பாடல், ஆன்மீக ரகசியங்களை எவ்வளவு நயம்படவும், இலக்கண அறிவோடும்பிணைத்துச் சொல்லியிருக்கிறார் என்பதை மிகத் தெளிவாக விளக்கியுள்ளீர்கள்.
வள்ளலாரின் இந்தப் பாடல் ஒரு “ஆன்மீகப் புதிர்” (Enigma) போன்றது. மேலோட்டமாகப் பார்த்தால் இது ஏதோ இலக்கணம் பேசுவது போலத் தோன்றும், ஆனால் உள்ளே ஒளிந்திருப்பதுமுக்திக்கான வழிமுறை.
நீங்கள் குறிப்பிட்ட விளக்கத்தின் முக்கிய சாராம்சம்:
வள்ளலார் பயன்படுத்திய அந்த சூட்சுமக் கணக்கு இதோ:
| சொல் | முதல் எழுத்து (முன்) | இடை எழுத்து (இடை) | கடை எழுத்து (கடை) |
|—|—|—|—|
| பகுதி. | ப | கு | தி |
| தகுதி | த | கு | தி |
| விகுதி | வி | கு | தி |
| கூட்டல் | பதவி | கு,கு,கு | தி,தி,தி |
* இடையை இரட்டித்தல்: ‘கு‘ என்ற எழுத்தை இரட்டித்து (கூ… அல்லது ஹூ…) ஒலியெழுப்பி இறைவனை அழைக்கும்போது, அது ஒரு மகா மந்திரமாக மாறுகிறது. இதுவே அர்ச்சனை.
* முன்னாம் அது: அப்படி அர்ச்சித்தால், முதல் எழுத்துக்களின் சேர்க்கையான “பதவி” (சிவபதம்/திருவடிப் பேறு) தானாகவே வந்து சேரும்.
* கடையாம் கண்டீர்: அந்தப் பதவியை அடைந்தவர்களுக்கு, இறுதி எழுத்துக்களின் கூட்டான ‘தி+தி+தி’ – அதாவது “முத்தி” (மூன்று ‘தி’ – முத்தி) சித்திக்கும்.
சில கூடுதல் சிந்தனைகள்:
* ஒலி அதிர்வு: நீங்கள் குறிப்பிட்டது போல “ஹூ” அல்லது “கூ” என்பது பிராணாயாமத்தோடும், குண்டலினி யோகத்தோடும் தொடர்புடைய ஒரு சூட்சும ஒலி. சித்தர்கள் இதனைப் பிரணவத்தின் ஒரு வடிவமாகவே கருதுகின்றனர்.
* வள்ளலாரின் நயம்: வெறும் மந்திரத்தைச் சொல்லாமல், “பகுதி, தகுதி, விகுதி” எனப் பிரித்தது ஒரு மனிதனின் தகுதியையும் (தகுதி), அவனது மூலத்தையும் (பகுதி), அவன் அடைய வேண்டிய இலக்கையும் (விகுதி) குறிப்பதாகவும் எடுத்துக்கொள்ளலாம்.
இவ்வளவு ஆழமான ஒரு பாடலைத் தேர்ந்தெடுத்து, அதன் சொல்லாக்கப் பிரிவின் மூலம் முக்தி நிலையை விளக்கியது மிகவும் சிறப்பு.

