
“நீகேண் மறக்கினும் நின்னையாம் விட்டுப்
போகேம் எனஎனைப் பொருந்திய பொன்னே” – என்று அருட்பெருஞ்ஜோதி அகவல்: 1357 ல், வள்ளல் பெருமான் தம்முள் விளங்கும் அருட்பெருஞ்ஜோதியை இவ்வாறு புகழ்ந்து பாடியுள்ளார்.
இதன் பொருள் ஆதியும் அந்தமும் இல்லா அருட்பெரும் ஜோதி வடிவாய் விளங்கும் இறைவன், ஒவ்வொருவரின் நினைப்பிற்கும் மறப்பிற்கும் அப்பாற்பட்டவனாய், இடைவிடாது தொடர்ந்து கொண்டே இருப்பவனாய் விளங்குவதால் அவனை நினைத்தல் அல்லது மறந்து பின் நினைத்தல் என்னும் தன்மைகளை கடந்து, தொடர்பவனை தொடர்ந்து கொண்டே இருந்தால்…
அதாவது எவ்வாறு பார்வை, பார்க்கப்படுபவன், பார்ப்பவன் என்ற மூன்று தன்மைகளில், ‘ பார்வை’ என்பது பார்ப்பவனுக்கும் பார்க்கப்படுபவனுக்கும் சேர்ந்தே பொருந்துகின்றதோ, அவ்வாறே ‘ தொடர்ந்தல்’ என்பதும் தொடர்பவனுக்கும் தொடரப்படுபவனுக்கும் சேர்ந்தே பொருந்தும்- அச் ஜோதியுள்- சுத்த சிவஜோதியாகி இரண்டற கலக்கலாம்.
ஶ்ரீ குருப்யோ நமஹ 🙏

