
“Adam and Eve,ஆதாமும் ஏவாளும்”
உடலை மறைப்பதற்கு தான் ஆடை உயிரை மறைப்பதற்கு அல்ல, ஏனெனில் உயிர் ஐம்பொறிகள் எனப்படும் உடலின் ஐந்து புலனுணர் உறுப்புகளான கண் (பார்வை), காது (கேட்டல்), மூக்கு (முகர்தல்), நாக்கு (சுவைத்தல்), மற்றும் தோல் (தொடுதல்/உணர்தல்) போன்ற இவைகளுக்கு தென்படாதது, எனவே சிந்தனைக்கு எட்டாதத அறிவு மயமானது, ஐம் பொறிகள் கொண்ட இவ- உடம்பை உருவாக்கி இயக்கிக் கொண்டுமிருப்பது, அதற்கு வேறாக எதுவும் இல்லை என்பதால் மறைப்பு என்னும் தன்மையற்ற, மாறுபாடு இல்லாத ஒளிக்கெல்லாம் ஒளியாக இருந்து கொண்டிருக்கிறது.
அவ் – இறைவனிடமிருந்து இறைவனின் அம்சமாகவே, அதாவது ஒளியாகவே வெளிப்பட்ட ஆதாமும் ஏவாளும் முதன் முதலில் மறைப்பு என்னும் தன்மையற்றதாகவே இருந்தனர். எப்பொழுது உயிர் எனும் ஒளியானது மாறுபாடு கொண்ட இருளாக, அதாவது உடம்பாக அறியப்பட்டதோ, அப்பொழுதே மறைப்பற்ற உயிரின் தன்மை மறைந்து போக, உடம்போடு இணைந்த மறைப்பு என்னும் தன்மை , ஆதம் ஏவாளை, மறைப்பு என்னும் ஆடை கொண்ட காணக்கூடிய உருவமாக மாற்றிற்று. அதன் காரணம் அவர்களிடமிருந்து தோன்றிய அனைத்து மனித உருவங்களும் மறைப்பு என்னும் மாய திரையால் சூழப்பட்டுள்ளதால், தான்தான் இறை ஒளி என்று அறிந்து கொள்ள முடியவில்லை.
“மறைப்பின் மறந்தன வருவித்து ஆங்கே அறத்தோடு தெருட்டும் அருட்பெருஞ் ஜோதி” என்று அருட்பெருஞ்ஜோதி அகவல்- 843 ல் வள்ளலார் உரைத்தபடி,
எப்பொழுது ஒருவருக்கு மறைப்பு என்னும் தன்மை குரு அருளால் மறைந்து போகிறதோ, அக்கணமே அருட்பெருஞ்ஜோதி தரிசனம் கிட்டும்
ஶ்ரீ குருப்யோ நமஹ 🙏

