“சுப்ரமணிய பாரதி நினைவு தினம்”

இன்று மகாகவி சுப்ரமணிய பாரதியின் நினைவு தினம். அவருடைய நினைவு தினமான இன்று அவர் பாடிய ,
நல்லதோர் வீணை செய்தே – அதை நலங்கெடப் புழுதியில் எறிவதுண்டோ? என்ற பாடலின் வரிகளையும் அதன் உட்பொருளையும் இங்கு காணலாம்.

ஒவ்வொரு மானுட தேகமும் வீணைக்கு ஒப்பானது தான். அதிலிருந்து வெளிப்படும் சப்த ஸ்வரங்கள், காமம், குரோதம், துவேஷம், லோபம், மோகம், மதம், மாத்சரியம் என்னும் ஏழு குணங்களின் கலவையாகி, அது சிவப்பு, ஆரஞ்சு, மஞ்சள், பச்சை, நீலம், இண்டிகோ மற்றும் வயலட் என்னும் ஏழு நிற கலவையின் உருவாகி, பற்பல பிறவிகளாக இந்த மாயா பிரபஞ்சத்தில் மீண்டும் உட்புகுத்தப்பட்டு, அதாவது நலங்கெடப் புழுதியில் மீண்டும் எறியப்பட்டுக் கொண்டிருக்கிறது.
மாறாக, அநாகத ஒலி” என்று ஒன்று உண்டு. அது உருவமற்ற அல்லது உருவகப்படுத்த முடியாததாக, ஒவ்வொரு மானுட தேகத்துக்குள்ளும் மறைந்திருக்கும் தெய்வீக ஒலியாகும். வீணைக்கு ஒப்பான இத் தேகத்தை மீட்டி அனாகத ஒலியை எழுப்பி இம்மயா பிரபஞ்சத்தை வெல்லும் வல்லமையை வேண்டி, அதன் மூலம் இம்மாநிலமும்  பயனுற…
“வல்லமை தாராயோ – இந்த மாநிலம் பயனுற வாழ்வதற்கே என்று பாரதியார் சிவ சக்தியிடம் முறையிடுகிறார். மகாகவி பாரதியாரின் நினைவு தினமான இன்று, என் குரு மூலம் நான் கற்ற இப்பாடலின் பொருளை அவருக்கு சமர்ப்பிக்கிறேன்.
ஸ்ரீ குருப்யோ நமஹ 🙏

Leave a comment