“Kun fa-yakün”

“அல்லாஹ்” (Allah) என்ற அரபுச் சொல்லின் பொருள் “வணக்கத்திற்குத் தகுதியான ஒரே இறைவன்” என்பதாகும்.
குன் (كُنْ):
“இரு”, ஆகுக என்று பொருள்படும். இது ஒரு செய் என்னும் கட்டளை சொல்லாகும்.
ஃபா-யாகுன் (فَيَكُونُ):
“ஆகவும்”, “அதுவும் ஆகிறது” என்று பொருள்படும்.
இந்த சொற்றொடர் குர்ஆனில் பல இடங்களில் “அல்லாஹ்” வின் படைப்பாற்றல் மற்றும் வல்லமை கொண்ட தன்மையைப் பற்றிப் பேசும் போது பயன்படுத்தப்படுகிறது.

அதாவது விழிப்பு கனவு உறக்கம் என்னும் மூன்று நிலைகளைக் கொண்ட ஒவ்வொரு மனிதரிடமிருந்து “செய்” என்னும் கட்டளையானது  “இரு” என்னும் தன்மையாக அவரின் உள்ளேயே சதா பிறப்பிக்கப்பட்டுப் கொண்டே இருக்கிறது. அதன் அடிப்படையில் தான் ஒவ்வொரு செயலாற்றலும் நிகழ்கிறது. இத்தெய்வீக  தன்மையோடு தன்னை தக்க வைத்துக் கொண்டவர்களுக்கு மட்டுமே, வணக்கத்துக்குரிய தகுதியான ஒரே இறைவனாக “அல்லாஹ்” ஆகிறான்.
இவ்வாறு இத்தன்மையை உணர்ந்து தன்னை அத்தன்மையோடு தக்க வைத்துக்கொள்ள இயலாதவர்களுக்கு “அல்லாஹ்” வின் படைப்பாற்றலும் வல்லமையும் வெளிப்படாது.


“தக்கார் தகவிலர் என்பது அவரவர்
எச்சத்தாற் காணப்ப படும்”. என்பது வள்ளுவரின் திருக்குறள். அதாவது இறைவனின் “செய் அல்லது இரு” என்னும் கட்டளையின் தன்மையோடு தம்மை தக்க வைத்துக் கொண்டவர்கள் மற்றும் அவ்வாறு தம்மை தக்கவைத்துக் கொள்ள இயலாதவர்கள் இவர்களின் வேறுபாட்டை, அவரவர்களின் செயல்பாட்டின் பலன்களை  கொண்டு காணலாம்.