Old testament-14

நீ மிகவும் பிரியமானவன். ஆதலால், நீ வேண்டிக்கொள்ளத் தொடங்கினபோதே கட்டளை வெளிப்பட்டது, நான் அதை அறிவிக்கவந்தேன். இப்போதும் சொல்லுகிற வார்த்தையை நீ கவனித்துக்கேட்டு, தரிசனத்தை அறிந்துகொள். :தானியேல் 9:23

குன்பயகூன் كُنْ فَيَكُوْنُ)‏) என்ற இந்த வார்த்தையை இறைவன் குர்ஆனில் பல இடங்களில் பயன்படுத்துகிறான். இறைவன் كُنْ)’‏‏‏ – நீ ஆகுக)’ என்று சொன்னால் உடன் ஆகிவிடும்.

அதாவது இறைவனை உண்மையாக விசுவாசிக்கிறவர்கள், ஒன்றை நினைத்து வேண்டிக் கொள்ளும் போதே, அது அவ்வாறே ஆகுக என்று இறைவனால் அக்கணமே கட்டளையாக பிறப்பிக்கப்படுகிறது.  இத்தகைய விசுவாசம் ஒருவருக்கு ஊர்ஜிதமாக வேண்டுமெனில், “இருக்கிறார் இறைவன்” என்று தான் சொல்லும் வார்த்தையை கூர்ந்து கவனித்து கேட்கப்படும் போது கிடைக்கும்  தரிசனத்தை அறிந்து கொள்வதன் மூலம், அவர்தம் இறைவன் பேரில் கொண்டிருக்கும் விசுவாசம் ஊர்ஜிதம் ஆகும்.
ஆமென்.

Leave a comment