
வந்த விருந்தினரைப் போற்றி, இனிவரும் விருந்தினரை எதிர்பார்த்து இருப்பவர்கள் தெய்வீகமான அமைதி என்னும் ஆசீர்வாதத்தை பெறுவார்கள்.

“இந்த மனித இருப்பு ஒரு விருந்தினர் மாளிகை. ஒவ்வொரு காலையும் ஒரு புதிய வருகை. ஒரு மகிழ்ச்சி, ஒரு மனச்சோர்வு, ஒரு அற்பத்தனம், சில தற்காலிக விழிப்புணர்வு எதிர்பாராத விருந்தினராக வருகிறது… அவர்கள் அனைவரையும் வரவேற்று மகிழ்விக்கவும். ஒவ்வொரு “வந்த விருந்தினரையும்” மரியாதையுடன் நடத்துங்கள்.
இருண்ட எண்ணம், அவமானம், தீமை போன்ற “வரும் விருந்தினர்களை” வாசலில் சிரித்துக்கொண்டே சந்தித்து, அவர்களை உள்ளே அழைக்கவும். யார் வந்தாலும் அவர்களுக்கு நன்றியுடன் இருங்கள், ஏனென்றால் ஒவ்வொருவரும் அப்பால் இருந்து ஒரு வழிகாட்டியாக அனுப்பப் பட்டுள்ளனர்” என்று சுபி ஞானி ஹஸ்ரத் ரூமி குறிப்பிடுகிறார்.
எதற்காகவென்றால் ஒவ்வொரு மனித இருப்புக்குள்ளும் நிரந்தர அமைதி குடி கொண்டிருக்கிறது. வழிகாட்டியாக அனுப்பப்படும் இவ்- விருந்தினர்களின் துணை கொண்டு, மனம் அடங்க கற்றுக்கொண்டு, நிரந்தர அமைதியை பெறுவதற்காகவே!
வாழ்க தமிழ்,🙏 வாழ்க வள்ளுவம் 🙏

