
உனக்கு நான் செய்வதென்னவென்றால், தண்ணீரில்லாத குழியிலே அடைபட்டிருக்கிற உன்னுடையவர்களை நான் என் உடன்படிக்கையின் இரத்தத்தினாலே விடுதலைபண்ணுவேன்.
சகரியா 9:11
பைபிளின் புதிய ஏற்பாட்டில், இயேசு சமாரியப் பெண்ணிடம் நான் கொடுக்கும் தண்ணீரைக் குடிக்கிற எவருக்கும் ஒருக்காலும் தாகமுண்டாகாது. நான் கொடுக்கும் தண்ணீர் நித்திய ஜீவனுக்காக ஊறுகிற நீரூற்றாக மாறும்” என்று சொன்னதாக இருக்கிறது. அதாவது இதுவே சமாரிய பெண்ணுக்கும் இயேசுவுக்கும் இடையில் சகரியா 9:11 ல் குறிப்பிட்டது போல் கொண்ட உடன்படிக்கை என்பதாக கொள்ளலாம்.
அதன்படி இந்த உடன்படிக்கைக்கு உட்பட்டவர்களின் உயிரானது உடம்பிலேயே அடங்கப் பெற்று குழியிலே அடக்கம் செய்யப்பட்ட பின்பு, அவ்வுடம்பில் தண்ணீரின் பண்பு கொண்ட ரத்தமானது முழுவதும் வறண்டு போய்தான் அக்குழியிலே அடைப்பட்டு இருக்கும். அக்கணத்தில் கர்த்தரால் குழியில் அடைபடுவதற்கு முன், தாகத்தை தீர்த்து நித்திய ஜீவனாக மாற்றும் வகையில் அவர்களுக்கு கொடுக்கப்பட்ட நீரானது, புதிய ரத்தமாக அவ்வுடம்பிலேயே ஊற்றெடுத்து, அடைபட்ட குழியிலிருந்து நிரந்தரமாக அவர்களை விடுவிக்கும்.
இது கர்த்தரோடு இத்தகைய உடன்படிக்கையை ஏற்படுத்திக் கொண்டவர்களுக்கு மட்டுமே பொருந்தும். உடன்படிக்கை இல்லாத ஏனையோர் உடம்பெல்லாம் தண்ணீரில்லாத குழியிலே அடைப்பட்டு வறண்டு போனது போனதுதான், மீண்டும் உயிர்த்தெழுதாது.
ஆமென்.

