
Hazrat Rumi
நீங்கள் உங்களை அடிக்கடி சந்தித்துப் பேசுகிறீர்களா? இப்போதே தொடங்குங்கள்.~ ஹஜ்ரத் ரூமி
சந்திப்பு என்பது ஒருவரை ஒருவர் நேருக்கு நேர் பார்த்தல் என்னும் நிகழ்வே ஆகும். அதாவது இத்தகைய சந்திப்பு நிகழ்வதற்கு இரண்டு பார்வையாளர்கள் வேண்டும்.
அதன்படி ஒருவர் தன்னைத் தானே சந்தித்து பேசிக்கொள்வது என்பது, தம் புறகண்கள் வழியாக முழுவதுமாகவும், உண்மையாகவும் கண்டு நேசித்த ஒருவரை, தம் மனக் கண்ணின் வழியாகவும் இடைவிடாது கண்டு, அகமகிழ்ந்து பேசிக் கொண்டிருத்தலே ஆகும். இத்தகைய சந்திப்பு காதல் வயப்பட்ட ஆண் பெண் இவ்விருவர் இடையில் சொற்ப காலத்திற்கு நிகழும்.
இதற்கு மாறாக “உனக்கும் எனக்கும் இசைந்த பொருத்தம்” என்று வள்ளல் பெருமான் தன் திருவருட்பாவில் பாடியுள்ளபடி, ஒருவரின் தெய்வீக இசையினால் மற்றொருவர் வயப்பட்டு, அதனால் இத்தகைய சந்திப்பு நிகழும் போது, அதில் பிரிவு என்பது ஒருபோதும் ஏற்படாது அதன் காரணம் பேச்சும் ஒரு போதும் தடைபடாது.
ஸ்ரீ குருப்யோ நமஹ 🙏

