
Ramana Maharishi says: “There is no creation, no destruction, none bound, none seeking, striving, gaining freedom.Know that this is the Truth supreme.”
ரமண மகரிஷி கூறுகிறார்: “படைப்பு இல்லை, அழிவு இல்லை, கட்டுப்படவில்லை, தேடுவது, பாடுபடுவது, விடுதலை பெறுவது எதுவும் இல்லை. இதுவே உயர்ந்த உண்மை என்பதை அறிந்து கொள்ளுங்கள்.”
இதேபோன்ற வாசகம் “படைப்பும் இல்லை, இறைவனும் இல்லை, நீயும் இல்லை, நானும் இல்லை” என்ற ஹதீஸ், நாற்பது ஹதீஸ் குத்ஸியில் இடம்பெற்றுள்ளது.
ஒவ்வொரு மனிதனின் பிறப்பு என்பது இறப்புக்கும், அவ்வாறே இறப்பு என்பது மீண்டும் மறுபிறப்பு என்பதற்கும் கட்டுப்பட்டு உள்ளது. இந்தக் கட்டுப்பாடு அகலாத வரை தேடுதல், பாடுபடுதல், விடுதலை பெற முயற்சித்தல் போன்றவைகள் முடிவில்லாமல் தொடர்ந்து கொண்டே இருக்கும்.
உண்மையான நிலை என்பது ‘தூய இருப்பு’ மட்டுமே ஆகும், அதற்கு ஆரம்பம், முடிவு அல்லது நடு இல்லை, எனவே அது பிறப்பு மற்றும் இறப்பு சுழற்சியில் வராது. நாம் காட்சியாக காணும் பஞ்சபூத கலவையால் ஆன நம்முடைய தேகம், தூய இருப்பின் பிரதிபலிப்பு சக்தியே!
அஷ்டவக்ர கீதை, அத்தியாயம் 9.7 ல் சொல்லப்பட்டுள்ள படி, பஞ்சபூத திரிபுகளால் ஆன இத் தேகத்தை பஞ்சபூதங்களாகவே உணரும்போது அக்கணமே, இவ்வுடலே நான் என்னும் அஞ்ஞான இருள் விலகி, அக்கணமே படைப்பு இல்லை, அழிவு இல்லை, கட்டுப்படவில்லை, தேடுவது, பாடுபடுவது, விடுதலை பெறுவது எதுவும் இல்லை எனும் உயர்ந்த உண்மை நிலையாக ‘நான்’ என்பது வெளிப்படும்.
Hazrat Rumi also says, “Do not see yourself as a body made of clay; feel yourself as a “pure presence” reflecting the divine beauty.”

ஸ்ரீ குருப்யோ நமஹ,🙏

