
நான் வானத்தை நிலைப்படுத்தி, பூமியை அஸ்திபாரப்படுத்தி, சீயோனை நோக்கி: நீ என் ஜனமென்று சொல்வதற்காக, நான் என் வார்த்தையை உன் வாயிலே அருளி, என் கரத்தின் நிழலினால் உன்னை மறைக்கிறேன்.
ஏசாயா 51:16
வெளி என்னும் ஆகாயம் நிலை பெற்றால் தான் அது பூமிக்கு பலமான அஸ்திவாரமாக அமையும். அதாவது பூமியின் அம்சமான இம்மானுட தேகத்துக்குள் அடங்கியிருக்கும் ஆகாயம் என்னும் உயிர், இடம் விட்டு இடம் பெயராமல் நிலை பெற்றால்தான், அது இவ்-உடம்புக்கு பலமான அஸ்திவாரமாக அமையும்.
‘இருக்கிறார்’ என்பதுதான் இறைவனின் திருநாமம் அதுவே அவருடைய வார்த்தையாகவும் இருக்கிறது. அதே வார்த்தை நம் வாயில் இறைவனால் அருளப்படும்போது, அது ‘இருக்கிறேன்’ என்னும் தூயஉணர்வாக நம்முள் ஆகி, அதனால் நம்முள் இருக்கும் ‘வானம் என்னும் சத்திய ஆவி’ நிலைப்படுத்தப்பட்டு, அதன் மூலம் பூமியும் அதாவது இவ்-உடம்பும் அஸ்திபாரப் படுத்தப்படுகிறது.
‘கரம்’ என்னும் சொல்லுக்கு ஒளி மற்றும் ஒளிக்கதிர்கள் என்று பொருள் உள்ளது. ஒளியில் நிழல் உருவாகாது அதன் கதிர்கள் ஒரு பொருள் மீது பட்டு தான் நிழல் என்பது உருவாகும். இறைவனின் கரத்திலிருந்து வெளிப்படும் ஒளிக்கதிர்கள் இவ் உடம்பின் மீது படும்போது அதனால் வெளிப்படும் ஒளியின் நிழலில், நிழலும் ஒளியாகி, அதாவது இத்தேகம் முழுவதும் ஒளிக்கதிர்களாக மாறி, இறைவனின் கரத்தின் ஒளியில் மறைந்து போய்விடும்.
ஒளிஒருவற்கு உள்ள வெறுக்கை இளிஒருவற்கு
அஃதிறந்து வாழ்தும் எனல். குறள் 971
ஒருவனுக்கு ஒளி, ஊக்கத்தை கொடுக்கும் இறைவனின் கரங்களே ஆகும், ஒருவனுக்கு இழிவு அந்த ஊக்கம் இல்லாமலேயே, அக்-கரங்களின் நிழல் இல்லாமலேயே உயிர்வாழலாம் என்று எண்ணுதலாம்.
ஸ்ரீ குருப்யோ நமஹ 🙏

