
“தேவனால் பிறப்பதெல்லாம் உலகத்தை ஜெயிக்கும். நம்முடைய விசுவாசமே உலகத்தை ஜெயிக்கிற ஜெயம்”. 1யோவான் 5:4
“தோன்றின் புகழொடு தோன்றுக அஃதிலார்
தோன்றலின் தோன்றாமை நன்று”.
dvijatva (த்விஜாத்வா) என்பது சமஸ்கிருத சொல். அதன் பொருள் being twice-born அதாவது பிறப்பால் ஒரு முறை தோன்றுவது, தோன்றியபின் “தேவனால் மீண்டும் ஒரு தோற்றம் அல்லது பிறப்பு” என்னும் இருவகை பிறப்புக்கள் மனிதகுலத்திற்கு மட்டுமே ஆசீர்வாதிக்கப்பட்டுள்ளது.
பைபிள் வாசகம்:In The Bible Jesus replied, “The truth is, no one can enter the Kingdom of God without being born of water and the Spirit”.
புகழ் என்பது மனிதனில் இருந்து தெய்வநிலைக்கு உயர்வதே ! அத்தகைய தெய்வ நிலைக்கு உயர்த்தும் ஞானம் எவர் மூலம் ஒருவருக்கு கிட்டுகிறதோ! அவரே தேவன் எனப்படுபவர் ஆகிறார். உலகம் என்னும் சொல்லுக்கு மீண்டும் மீண்டும் பிறத்தல் என்பதாகும். அவ்வகையில் இத்தகைய தேவனால் பிறப்பிக்கப்பட்டு ‘பிறவாமை என்னும் ஞானப் பெரும் பேற்றை’ பெறுவதன் மூலம், மீண்டும் மீண்டும் பிறத்தல் எனும் உலகத்தை ஜெயித்தவர்கள் ஆகிறார்கள். அதாவது இவ்வாறு தம்மை மீண்டும் ஞானத்தால் பிறப்பித்த தேவனின் மீது கொண்டிருக்கும் அசைக்க முடியாத “விசுவாசமே உலகத்தை ஜெயிக்கிற ஜெயம்”.
அஃதிலார்: இத்தகைய இரு பிறப்பாலன் என்னும் தகுதியை பெற்றும், அவ்விசுவாசியாக மாறிப்போய், உலகத்தை ஜெயம் கொள்ளும் வழி தெரியாமல் தத்தளித்துக் கொண்டிருப்பவர்கள்…
மானிடராய் பிறக்காமல், அதாவது தோன்றாமல் இருத்தலே மனிதகுலத்திற்கு நன்மை உடையதாய் இருக்கும் என்னும் பொருள்பட வள்ளுவர் முடிக்கிறார்.
ஸ்ரீ குருப்யோ நமக 🙏

