” opinion-sharing without comprehension”.

” opinion-sharing without comprehension”.
“The opinion of 10,000 men and women is of no value if none of them know anything about the subject.” – Marcus Aurelius
அந்த விஷயத்தைப் பற்றி எதுவும் அறியாத 10000 பேர்களின் கருத்துக்கு எந்த ஒரு மதிப்பும் இல்லை!,-மார்கஸ் ஆரேலியஸ்
கேள்வி என்று ஒன்று, அது தன்னுள்ளேயோ அல்லது வெளியேயோ எழாமல், அதற்குரிய விளக்கமும் கிடைக்கப் பெறாமல், எந்த ஒரு விஷயத்தைப் பற்றிய முழு சாராம்சத்தையும் எவர் ஒருவராலும் முழுமையாக உணர இயலாது. அதாவது அவ்-விஷயத்தைப் பற்றிய கேள்வியே எழவில்லை என்றாலும் அல்லது கேள்விக்கு உரிய பதில் கிடைக்காமல் போனாலும், அது அறியப்படாத விஷயமாக, அதனால் எந்தவொரு பயனும் கிட்டாமல் தனக்குள்ளேயே ‘நீரு பூத்த நெருப்பை போல்’  அடங்கியே தான் இருக்கும். இத்தகைய எளிதில் அறியப்பட இயலாத விஷயங்களை, மற்றவர்களிடம் அவர்கள் வெளிப்படுத்தும் வெறும்  பயனற்ற கருத்துக் குறிகளான 🙏👍💐❤️😄😗 இவைகளை பெறுவதற்காக மட்டுமே பயன்படுத்தினால், அத்தகைய நல்ல விஷயங்கள் ‘விழலுக்கு இறைத்த நீர் போல்’ வீணாகிப் போய்விடும். தகவல் பரிமாற்றத்திற்காக தற்காலத்தில் நடைமுறையில் இருந்து கொண்டிருக்கும் WhatsApp, Facebook, etc போன்றவைகளில் இத்தகைய நிகழ்வை கண்கூடாக காணலாம்.

Leave a comment