New testament-2

லூக்கா 6:48
ஆழமாய்த் தோண்டி, கற்பாறையின்மேல் அஸ்திபாரம்போட்டு, வீடுகட்டுகிற மனுஷனுக்கு ஒப்பாயிருக்கிறான், பெருவெள்ளம் வந்து, நீரோட்டம் அந்த வீட்டின்மேல் மோதியும், அதை அசைக்கக் கூடாமற்போயிற்று, ஏனென்றால் அது கன்மலையின்மேல் அஸ்திபாரம் போடப்பட்டிருந்தது.

லூக்கா 6:49
என் வார்த்தைகளைக் கேட்டும் அவைகளின்படி செய்யாதவனோ அஸ்திபாரமில்லாமல் மண்ணின்மேல் வீடுகட்டினவனுக்கு ஒப்பாயிருக்கிறான், நீரோட்டம் அதின்மேல் மோதினவுடனே அது விழுந்தது, விழுந்து முழுவதும் அழிந்தது என்றார்.

Interpretation:
‘நீரோட்டம்’ என்று இங்கு குறிப்பிடுவது, இறுதி நாளில் ஒவ்வொருவர் தேகத்தின் உள் பெரும் பகுதியாக சுற்றிக் கொண்டிருக்கும் நீரானது, கெட்டிப்பட்டு சளியாக பெருக்கெடுப்பதை குறிப்பது.
ஒவ்வொருவர் தேகமும் எண்ணற்ற உயிர் அணுக்களை கொண்டு வாயு என்னும் சூத்திரத்தால் அதாவது வாயுவின் தன்மை கொண்ட சுவாசத்தால் கட்டப்பட்டு இயங்கிக் கொண்டிருக்கிறது. அது குருவின் வார்த்தை கலந்த சுவாசமாக இருந்தால் அத்தேகம் பாறையின் மீது கட்டப்பட்ட கட்டிடம் போன்று, இறுதி காலத்தில் உருவாகும் சளி நிரம்பிய நீரோட்டத்தால் அசைக்க முடியாமல், சுவாசமானது அத் தேகத்துக்கு உள்ளேயே அடங்கிவிடும். அதன் காரணம் உயிர் அணுக்கள் கட்ட அவிழ்ந்து போகாது.

ஆனால் குருவின் வார்த்தைகளை கேட்டும் அதை அலட்சியம் செய்தால், அத்தகைய தேகம் மண்ணின் மீது கட்டப்பட்ட கட்டிடம் போன்று அஸ்திவாரம் இல்லாமல் இருந்து கொண்டிருக்கும். இறுதி காலத்தில் உருவாகும் சளி நிரம்பிய நீரோட்டத்தால், சுவாசம் மீண்டும் உட்புக முடியாமல் போக, தேகத்தில் உள்ள உயிரணுக்கள் யாவும் கட்டஅவிழ்ந்து போக, தேகம் முற்றிலும் அழிந்துவிடும்.
ஸ்ரீ குருப்யோ நமக🙏