
இன்று மகளிர் தினம் என்று, மகளிர் தின வாழ்த்துக்களை வெளி உருவ அமைப்பை வைத்து பெண்கள் ஒருவருக்கொருவரும், மற்றும் ஆண்கள் பெண்களுக்குமாக வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டிருக்கிறார்கள்.
ஆனால் வள்ளல் பெருமான்,
“பெண்ணினுள் ஆணும் ஆணினுள் பெண்ணும்
அண்ணுற வகுத்த அருட்பெருஞ்ஜோதி”
என்று தம் அருட்பெருஞ்ஜோதி அகவலில் பாடியுள்ளார்.
பொதுவாக எல்லா மனிதர்களுமே ஆண் பெண் என்னும் இரண்டு தன்மைகளும் கலந்தே உருவாகி உள்ளனர். அதாவது ஒவ்வொரு பெண்ணும் உணர்வுகளின் வெளிப்பாடாகவும் அதேசமயம் ஒவ்வொரு ஆணும் பகுத்தறிவின் வெளிப்பாடாகவும் உருவாகி இருந்தாலும்,
இயல்பாக முடிவெடுக்கும் தருணங்களில் உணர்வும் பகுத்தறிவும், பெண்ணிலும் ஆணிலும் தனித்தனியாக வெளிப்படுவது போல் தோன்றினாலும்,
அதுவே அவசரகால முடிவாக மாறும் தருணங்களில் இதே உணர்வு ஆணிலும், பகுத்தறிவு பெண்ணிலுமாக மாறி வெளிப்படும்படி அமைத்தது அருள்பெருஞ்ஜோதியின் ஆற்றல்.
அவ்வகையில் உணர்வும், பகுத்தறிவும் கலந்த, அதாவது பெண்ணினுள் ஆண் தன்மையும், ஆணினுள் பெண் தன்மையும் கலந்து உருவான மனித குலத்திற்கு வாழ்த்துக்கள்💐

