
“நீங்கள் ஒருவரை “விரும்பும்போது”, அவர்களது தவறுகள் இருந்தபோதிலும் நீங்கள் அவர்களை விரும்புகிறீர்கள், நீங்கள் ஒருவரை “நேசிக்கும்போது”, அவர்களுடைய தவறுகளுடன் நீங்கள் அவர்களை நேசிக்கிறீர்கள்.” – ஹெர்மன் ஹெஸ்ஸி
இதுதான் உண்மையான அன்பிற்கும் பொய்யான அன்பிற்கும் உள்ள வேறுபாடு அதாவது பொய்யான அன்பு என்பது காட்சிகளுக்கு உட்படுத்தப்பட்ட உடல் சார்ந்தது. மறைமுகமாக அனுபவிக்கும் சுயநல பலன்கள் பொருட்டு, ஒருவருக்கு மற்றவரின் தவறுகள் பாதிப்பாக தோன்றாது. பலன்களில் பாதிப்பு ஏற்படும் போதுதான், அதே தவறுகள் பெரிதாக தோன்றி அது பிரிவினைக்கு வழிவகுக்கிறது.
மாறாக உண்மையான அன்பு என்பது காட்சிகளுக்கு அப்பாற்பட்ட உயிர் சார்ந்தது. அதிலும் மறைமுகமாக அனுபவிக்கும் பொதுப் பலன்கள் உண்டு எனினும், அது மென்மேலும் பெருகிக் கொண்டே போகுமே தவிர, ஒருக்காலும் அதில் பாதிப்பு என்பது உருவாகவே உருவாகாது. அதன் காரணம் அத்தகையவர்கள் உடல் சார்ந்த தவறுகளை ஒரு பொருட்டாக கொள்ள மாட்டார்கள், அங்குதான் “விருப்பம் நேசிப்பாக” மாறும், அதாவது “அன்பே சிவமாகும்”.
ஸ்ரீ குருப்யோ நமஹ🙏

