Old testament-7

ஜீவமார்க்கத்தை எனக்குத் தெரியப்படுத்துவீர், உம்முடைய சமுகத்தில் பரிபூரண ஆனந்தமும், உம்முடைய வலதுபாரிசத்தில் நித்தியபேரின்பமும் உண்டு.
-சங்கீதம் 16:11

ஜீவமார்க்கத்தை எனக்குத் தெரியப்படுத்துவீர் என்று ஒருவர் விண்ணப்பிக்கும் போதே, இதற்க்கு எதிர்டையாக ஜீவனற்ற ‘மரணமார்கம்’ என்று ஒன்று இருக்க வேண்டும் என்பதும் புலனாகிறது. அது போன்று ஜீவமார்கமானது கர்த்தரின் வலதுபாரிசத்தில் இருந்துதான் வெளிப்படும், அதில்தான் நித்தியபேரின்பமும் உண்டு.

‘வலம்புரி சங்கு’ என்று ஒன்று உண்டு. அது ஜீவமார்க்கத்திற்கு ஏதுவான நித்திய சப்தத்தை வெளிப்படுத்திக் கொண்டேயிருக்கும். அது கர்த்தரின் வலதுபாரிசத்தில் காணப்படாமல் மறைந்திருக்கும். இடதுபாரிசத்தில் காட்சியாக, வெளிப்படையாக தோன்றும் ‘இடம்புரி சங்கானது’ மரண மார்க்கத்திற்கு ஏதுவான அநித்திய சப்தத்தை வெளிப்படுத்திக் கொண்டேயிருக்கும்.

அதாவது சங்கு ஒன்றுதான், கர்த்தர் அருளாக தோன்றும் போது அது அவரின் வலதுபாரிசம் வழியாக உள்ளுக்குள் நித்திய சப்தமாகவும்,
அருளானது, அறியப்படாத நிலையில் அது மருளாகி கர்த்தரின் இடது பாரிசம் வழியாக வெளியில் அநித்திய சத்தமாகவும் கேட்டுக் கொண்டிருக்கிறது.
ஆமென்.

Leave a comment