
இன்று நான் உனக்கு விதிக்கிற உன் தேவனாகிய கர்த்தருடைய கட்டளைகளின்படியெல்லாம் செய்ய நீ கவனமாயிருக்கும்படிக்கு, அவர் சத்தத்திற்கு உண்மையாய்ச் செவிகொடுப்பாயானால், உன் தேவனாகிய கர்த்தர் பூமியிலுள்ள சகல ஜாதிகளிலும் உன்னை மேன்மையாக வைப்பார். -உபாகமம் 28:1
ஒருவர் தம் ஆழ்ந்த நித்திரையில் இருந்து விழித்து எழுந்த பின்பு காணப்படும் புதிய விடியலில் இருந்தே ‘இன்று’ என்பதும் ஒவ்வொருவருக்கும் புதிதாக தொடங்குகிறது.
“விடியலில் வீசும் தென்றல் உங்களுக்குச் சொல்ல ரகசியங்கள் உண்டு.மீண்டும் தூங்க வேண்டாம்.” என்று ஹஜ்ரத் ரூமி குறிப்பிட்டுள்ள படி, ஒவ்வொருவர் உள்ளும் வாசம் செய்யும் தேவனாகிய கர்த்தர், ஒவ்வொரு நாளும் விடியலில் வீசும் தென்றல் வழியாக உணர்வுபூர்வமாக சொல்லும் ரகசிய கட்டளைகளை கவனமாய் கிரகித்துக் கொண்டு அதன்படி செய்தால்.
அதாவதுஅவர் சத்தத்திற்கு, அவர் கட்டளைக்கு, உண்மையாய்ச் செவி கொடுத்தால், உன்னுள் வாசம் செய்யும் தேவனாகிய கர்த்தர் பூமியிலுள்ள சகல ஜாதிகளிலும் உன்னை மேன்மையாக வைப்பார்.

