Old testament-3

“உனக்கு விரோதமாய் எழும்பும் உன் சத்துருக்களைக் கர்த்தர் உனக்கு முன்பாக முறிய அடிக்கப்படும்படி ஒப்புக்கொடுப்பார், ஒரு வழியாய் உனக்கு எதிராகப் புறப்பட்டு வருவார்கள், ஏழு வழியாய் உனக்கு முன்பாக ஓடிப்போவார்கள்’.
உபாகமம் 28:7


Interpretation: ஒவ்வொருவருக்கும் விரோதமாக எழும்பும் சத்துருக்கள் காமம்,குரோதம்,துவேசம்,லோபம்,மோகம்,மதம்,மாத்சரியம் என்னும் ஏழு குணங்களே ஆகும். இவைகள் ஒருவனுக்கு விரோதமாக எழும் முன்பே கர்த்தர் ஆனவர் முறிய அடிக்கப்படும்படி ஒப்புக்கொடுப்பார். அதாவது  இவ்வெழு குணங்களுக்கு காரணமான  எண்ணங்களின் குவியலால் ஆன ‘மனம்’  என்பது ஒரு பொதுவான வாயில் கொண்டது. இந்த ‘மனம் என்னும் ஒரு வழியாக’ சத்ருக்கள் உனக்கு எதிராக புறப்பட்டு வருவார்கள். கர்த்தரின் கிருபையால் ‘மனம்’ அடங்கப் பெறுவதன் மூலம், சத்ருக்கள் வந்த ஒரு வழியே திரும்பி செல்ல முடியாமல், ஏழு வகையாக பிரிந்து ‘ஏழு குணங்களின் வழியாக’  உனக்கு முன்பாக ஓடிப்போவார்கள்’.

Leave a comment