
உன் சூரியன் இனி அஸ்தமிப்பதுமில்லை, உன் சந்திரன் மறைவதுமில்லை; கர்த்தரே உனக்கு நித்திய வெளிச்சமாயிருப்பார்; உன் துக்கநாட்கள் முடிந்துபோம்.
:ஏசாயா 60:20
Interpretation:
வலது நாசியின் வழியாக உள்ளே செல்லும் காற்றிற்கு சூரிய கலை என்றும்; இடது நாசியின் வழியாக உள்ளே செல்லும் காற்றிற்கு சந்திர கலை என்றும் நமது முன்னோர்கள் பெயர் சூட்டியுள்ளனர். இந்த இரண்டு சுவாசங்களுக்கும் தனித்தனிப் பண்புகளும் வெவ்வேறு வகையான செயல்பாடுகளும் உள்ளன. உடலுக்குத் தேவையான வெப்ப சக்தியைத் தருகின்ற பிராணன்கள் இதுவே.
ஆனால் இவற்றுக்கு மேலாக கர்த்தர் ஆனவர், ஒவ்வொரு ‘உயிருக்குள் உயிராய்’ அதாவது ‘சுவாசத்துக்குள் சுவாசமாக’ ஓங்கி ஒளிரும் தன்மையுடன் விளங்கிக் கொண்டிருப்பதை ஒருவரும் அறிகிலர். அதன் காரணம் துக்கத்துடனே ஒவ்வொரு வாழ்நாளையும் போக்கிக் கொண்டு இருக்கின்றனர்.
“God is the breath of all breath” என்னும் பேருண்மை கர்த்தரால் ஒருவருக்கு அறிவிக்கப்பட்டு அதை அவர் முழுமையாக உணரும் போது, அத்தகையவரின் இரண்டு நாசிகளின் வழியே இயங்கிக் கொண்டிருக்கும் சூரியன் மற்றும் சந்திரனுக்கு நித்திய வெளிச்சமாக கர்த்தர் அவர் உள்ளே இருந்து பிரகாசித்துக் கொண்டிருப்பதால்,
அவரின் சூரியன் அஸ்தமிப்பதுமில்லை, அதுபோன்றே அவரின் சந்திரன் மறைவதுமில்லை; அதன் காரணம் அதுவரை அவர் அனுபவித்திருந்த துக்க நாட்கள் முடிவுக்கு வந்து விடும்.
Sri Gurupyo namaha 🙏

