You are that! -“Particales of light”

நாம் ஒரு காலத்தில் ஒன்றுமில்லாத சக்தியின் ஒளியின் துகள்களாக அதாவது ஆன்மாவாக இருந்தோம்; இப்போது நாம் ஒளித்துக்கள்களின் மனித உருவங்களாக, கோடிக்கணக்கான உயிர் அணுக்களின் கட்டமைப்பாக இருக்கிறோம், ஒளித்துக்கள்கள் மூலம் அன்பைப் பரப்புகிறோம்; ஒளியில் அன்பின் கதிர்வீச்சு இல்லாவிட்டால், இயற்கையாகவே ஒளி மங்கிவிடும், இது பொய்யான வாழ்க்கைக்கும் மற்றும் இறப்புக்கும் வழிவகுக்கும். அதேசமயம் அன்பு பிரகாசித்தால், ஒளி பிரகாசமாகிறது, இதன் விளைவாக உண்மையுள்ள வாழ்க்கையும் மற்றும் அழியாத தன்மையும் கிட்டும்.

“அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு

என்புதோல் போர்த்த உடம்பு” (குறள்:80)

அன்பின் வழியாக உயிர் நிலைபெறும் தன்மையை அடையலாம்.

பிரகதாரண்யக உபநிஷத் குறிப்பிடுகிறது இவ்வாறு,

1: ஓம் தமசோமா (இருளில் இருந்து) 

ஜ்யோதிர்கமய : (ஒளிக்கு) அன்பின் வழியே எங்களை அழைத்துச் செல்லுங்கள்.

இருளில் அன்பின் வழி புலப்படாது, ஒளியின் மூலமாகத்தான் அன்பின் வழி புலப்படும். அன்பின் வழியாகத்தான் ஒருவர் உயிர் நிலைபெறும் தன்மையை எய்த இயலும்.

2:அவ்வொளியின் வழியே (அன்பின் வழியே) அசதோமா (உண்மையற்ற தன்மையிலிருந்து)

சத்கமய : (யதார்த்தத்திற்கு) எங்களை அழைத்துச் செல்லுங்கள்.

3: ஸத்தியத்தைப் பின்பற்றிய அவ்வறிவின் மூலம் ம்ரித்யோமா (மரண பயத்திலிருந்து) அமிர்தம்கமய : (அழியாமைக்கு)  அதாவது மீண்டும் ஒளித்துகள்களுக்கே  எங்களை அழைத்துச் செல்லுங்கள்.

எனவே பிரகதாரண்யக உபநிஷத் சாந்தி பாடத்தை கீழ் கண்டவாறு மாற்றி சொன்னால் அது மெய்ப்பொருளாகும்

ஓம் தமசோமா ஜ்யோதிர்கமய :

இருளில் இருந்து ஒளிக்கு அழைத்துச் செல்லுங்கள்.

அசதோமா சத்கமய :

பொய்யிலிருந்து உண்மைக்கு அழைத்துச் செல்லுங்கள்.

ம்ரித்யோமா அமிர்தம்கமய :

சாவிலிருந்து சாகமைக்கு அழைத்துச் செல்லுங்கள்.

என்னும் மெய்ப்பொருளுடன், பகவான் ரமண மகராஷி கூறியது போல், கிடைக்கும் ஒளியுடன் நீங்கள் தொடர்ந்து பணியாற்றினால், உங்கள் ஸத்குருவை நீங்கள் சந்திப்பீர்கள், அவர் உங்களைத் தேடி வருவார். இதன் விளைவாக, தேடுதல் என்பது உள்ளே இருக்கும் தேடுபவரைக் கண்டுபிடிப்பதில் மட்டுமே அக்கறை கொண்டுள்ளது. தேடுபவர் தோன்றினால் எல்லாம் ஒளியாகிறது.

மேலும் “ஒளி அதன் மூலத்திற்குத் திரும்பும்போது, அது ஒளிரச் செய்ததில் இருந்து எதையும் எடுக்காது.” என்பது சூஃபி துறவி ஹஸ்ரத் ரூமியின் கூற்று. அதாவது அமிர்தம்கமய : என்று உபநிஷத் சொல்வது என்பது ஒளி அதன் மூலத்திற்குத் திரும்பி ஒன்றுமில்லாத சக்தியின் ஒளியின் துகள்களாக அதாவது ஆன்மாவாக ஆவதே ஆகும் . அவ்வாறு திரும்பும் போது அது ஒளிர்ச் செய்த பஞ்ச கோஷங்களான இவ்வுடல், மனம்,புத்தி,பிராணன், ஆனந்தம் மற்றும் இவைகளின் வழியே ஒளிர்ந்த உலகங்கள் இவை எதையும் எடுத்துச் செல்லாது பின் அங்கு நிலவுவது தூய அமைதி ஒன்றேயாகும்.

ஓம் ஷாந்தி: ஷாந்தி: ஷாந்தி ஹி : 

ஸ்ரீ குருப்யோ நமஹ🙏🏿