
“ஆடிப்பட்டம் தேடி விதை”
பொதுவாக தமிழர்கள் ஆடிப்பிறப்பைச் சிறப்பாகக் கொண்டாடுவர்கள். அத்தகைய ‘ஆடி’ என்ற தமிழ் சொல்லின் விரிவாக்கம்:
‘ஆ’ என்பது ஓர் உயிர் எழுத்து, ‘டி’ என்பது உயிர் மெய்யெழுத்து, அதாவது ட் + இ என்பதின் கூட்டெழுத்து. அதாவது ‘ட்’ என்பது மெய் எழுத்து, ‘இ’ என்பது உயிர் எழுத்து.
‘ஆ’ என்பதற்கு ஆன்மா(உயிர்) என்று பொருள் உள்ளது. அது குருவையே குறிக்கும். ‘டி’ என்பது ‘பிராணனும், சரீரமும்’ கலந்த உயிர் மெய்யெழுத்து, இது மாணாக்கனையே குறிக்கும்.
எது மந்திரமாகின்றது ? அதன் தன்மையாது?
எது இருவேறு தன்மை கொண்ட பொருட்களை ஒன்றேயென தன்மயமாய் கூட்டுவிக்கின்றதோ அதுவே மந்திரமாகின்றது. அக்கூட்டுவித்தலே அதன் தன்மையுமாகும்.
ஆசாரியன் முதல் எழுத்து வடிவம்; சிஷ்யன் பின் எழுத்து வடிவம், வித்தை சந்திக்கும் இடம்; உபதேசம் சந்தியை செய்விப்பது; என்று தைத்திரீயோபநிஷத்து; சீஷாவல்லீ ல் சொல்லப்பட்டுள்ளது.
குரு முதல் எழுத்து வடிவம் ‘ஆ’ என்பது, சிஷ்யன் பின் எழுத்து வடிவம் ‘டி’ என்பது. இவ்வீறுவரையும் ஒன்றேயென கூட்டுவிப்பது மந்திரம், அதாவது முதல் எழுத்து வடிவம் ‘ஆ’ என்பதையும், பின் எழுத்து வடிவம் ‘டி’ என்பதையும் வித்தை எனும் சந்திக்கும் இடத்தில், மந்திரத்தால் ஒன்றேயென கூட்டுவிப்பது. அம்மந்திரத் தொனியில் குரு, சிஷ்யன் இவர்களின் தனித்துவங்கள் யாவும் மறைந்து ‘அஷ்ரசக்தி’ ஒன்றே வியாபித்திருக்கும்.
அவ்வகையில் ஆடி என்பது குரு, சிஷ்யன் இவ்வீறுவரையும் வித்தையால் ஒன்றேயென கூட்டுவித்து ‘அஷ்ர சக்தியாக’ ஆக்கும் மாதம் என்பதால் இது ஆதி பராசக்தி வழிபாட்டுக்கு சிறப்புக்குரிய மாதமாக ஆகிறது.
மேலும் “ஆடிப்பட்டம் தேடி விதை” என்று தமிழ் பழமொழி ஒன்று உள்ளது. முதல் எழுத்து வடிவம் ‘ஆ’ ஆன்மா என்பதாக இருக்கும் குருவானவர், பின் எழுத்து வடிவம் ‘டி’ என்பதாக இருக்கும் பக்குவமான மாணாக்கர்களை தேடி, பட்டம் என்னும் ‘அஷ்ர’ விதையை விதைக்கும் பருவம் இது என்பதால் ஆடி சிறப்புக்குரிய மாதமாக ஆகிறது.
பைபிளில் மத்தேயு அதிகாரம் 13 ல் ஏசு அநேக விஷேசங்களை உவமைகளாக மக்களுக்குச் சொன்னார்; கேளுங்கள், விதைக்கிறவன் ஒருவன் விதைக்கப்புறப்பட்டான்.
அவன் விதைக்கையில், சில விதை வழியருகே விழுந்தது; பறவைகள் வந்து அதைப் பட்சித்துப்போட்டது.
சில விதை அதிக மண்ணில்லாத கற்பாறை இடங்களில் விழுந்தது; மண் ஆழமாயிராததினாலே அது சீக்கிரமாய் முளைத்தது.
வெயில் ஏறினபோதோ, தீய்ந்துபோய், வேரில்லாமையால் உலர்ந்து போயிற்று.
சில விதை முள்ளுள்ள இடங்களில் விழுந்தது; முள் வளர்ந்து அதை நெருக்கிப்போட்டது.
சில விதையோ நல்ல நிலத்தில் விழுந்து, சிலது நூறாகவும், சிலது அறுபதாகவும், சிலது முப்பதாகவும் பலன் தந்தது.
கேட்கிறதற்கு காதுள்ளவன் கேட்கக்கடவன் என்றார்.
இறுதியாக பக்குவம் உள்ளவன் எவனோ அவனுக்குக் மேலும் மேலும் கொடுக்கப்படும், பரிபூரணமும் அடைவான்; பக்குவம் இல்லாதவன் எவனோ அவனிடத்திலிருந்து உள்ளதும் எடுத்துக்கொள்ளப்படும்
ஸ்ரீ குருப்யோ நமஹ🙏🏿

