You are that! – “A true knowledger”

“ஒருவரின் அறியாமையின் அளவை அறிவதே உண்மையான அறிவு.”-கன்பூசியஸ்

திருமூலரின் திருமந்திரம்:-
“தன்னை அறியத் தனக்கொரு கேடில்லை
தன்னை அறியாமல் தானே கெடுகின்றான
தன்னை அறியும் அறிவை அறிந்தபின்
தன்னையே அர்சிக்கத் தானிருந் தானே”

உண்மையான அறிவு என்பது தன்னை அறியும் அறிவை அறிவது தான். அது போன்றே அறியாமை என்பது ‘தான் யார்’ என்பதை அறியாமல் தானே கெடுவதுதான். ஆக ஒருவரின் அறியாமையின் அளவு என்பது அவர்கள் அடையப்போகும் கேட்டின் தன்மையை கொண்டே அளவிடலாம். அதாவது இத்தகைய கேடு என்பது அரிதிலும் அரிதான மானுடப் பிறப்பை அடைந்தும், தன்னை அறியும் அறிவை அறியப்பெறாதவர்கள், இறந்து மீண்டும் வேறு ஏதோ ஒரு ஆறு அறிவுக்கும் கீழான ஜீவராசியாக பிறப்பெடுப்பதுதான் இத்தகைய கேடு என்பதாகும்.

இத்தகைய கேட்டினை மதிப்பீடும் ஆற்றல் தன்னை முழுமையாக அறிந்து உணர்ந்து கொண்டவருக்கு மட்டுமே கிட்டும். என் குருபரம்பரையில் என் பராபர குரு இத்தகைய ஆற்றலை பெற்றிருந்தார். அதாவது அவர் தன் வீட்டை விட்டு வெளியில் செல்லும் போது முகத்திரையுடன் தான் செல்வாராம். ஏனெனில் அவரின் அறிவுக்கண்ணுக்கு, எதிரில் தெரியும் மக்களின் அறியாமையின் அளவு, அதாவது அவர்கள் அறியாமையால் இறந்து மீண்டும் வேறு எந்த ஒரு ஜீவராசிக்குள் புகப்போகிறார்கள் என்பதை துல்லியமாக மதிப்பிடும் ஆற்றலை பெற்றிருந்தமையால், அதை காணப்பெறாமல் முகத்திரையுடன் தான் செல்வாராம்.

ஸ்ரீ குருப்யோ நமஹ🙏🏿

Leave a comment