“Say “yes” and “no” together”

கொரிந்தியர் அதிகாரம் – 1 திருவிவிலியம்

இறைமகன் இயேசு கிறிஸ்து ஒரே நேரத்தில் ‘ஆம்’ என்றும் ‘இல்லை’ என்றும் பேசுபவர் அல்ல. மாறாக அவர் ‘ஆம்’ என சத்தியத்தையே  பேசுபவர். அவர் சொல்லும் ‘ஆம்’  எனும் சத்தியத்தின் வழியாக, கடவுள் அருளும் எல்லா வாக்குறுதிகளும் நிறைவேறுகின்றன. அதனால்தான் நாம் கடவுளைப் போற்றிப்புகழும்போது அவர் வழியாக ‘ஆமென்’* எனச் சொல்லுகிறோம்.

interpretation: மேலே திருவிவிலியம் குறிப்பிட்டுள்ள ‘ஆம்’ என்பது உடம்பின் இயக்கத்திற்கு மூலகாராணமான மூச்சு என்னும் ‘பரிசுத்த ஆவியை’ குறிக்கும். உடலை விட்டு ‘பரிசுத்த ஆவி’ பிரிந்து விட்டால் உடம்பின் இருப்பு என்பது ‘இல்லாமல்’ போய்விடும். ஆக ‘பரிசுத்த ஆவியே ஆம்’ என்பதாகவும், பரிசுத்த ஆவி இல்லாத ‘உடம்பு இல்லை’ என்பதாகவும் ஆகிறது.  

இறைமகன் இயேசு கிறிஸ்து ஒரே நேரத்தில் ‘ஆம்’ என்றும் ‘இல்லை’ என்றும் அதாவது பரிசுத்த ஆவியுடம்பாகவே இருந்து, அதனால் நடத்தப் படுபவராகவும், பேசுபவராக இருந்ததினால்தான், அவர் ‘ஆம்’ என சத்தியத்துக்குள் நடத்தும்படி தூண்டப்பட்டு, பேசுபவர் ஆனார். அதனால்தான் அவர் சொல்லிய  ‘ஆம்’ என்னும்  ‘ஆமென்’ வழியாக, கடவுள் அருளாக “ஆகுக என்றால் எல்லாம் ஆகிவிடுகிறது”.  

ஆனால் இன்றைக்கு ‘பரிசுத்த ஆவியால்’ நிரப்பபடுகிறேன் என்று சொல்லுகிற நீங்கள் ‘பரிசுத்த ஆவியால்’ நடத்தப்படுகிறேன், அதாவது  ஒரே  நேரத்தில் ‘ஆம்’ என்றும் ‘இல்லை’ என்றும்   பேசுகிறேன் என்று ஏன் சொல்வதில்லை? பரிசுத்தாவியானவர் நம்மை நடத்தும் போது வார்த்தைக்கு கீழ்படிந்து சத்தியத்துக்குள் நடத்தும் படி தூண்டுவார். ஆனால் இன்றைக்கு நாம் பரிசுத்த ஆவியானவரால் ஆளுகை செய்யப்படவில்லை. நம்முடைய சுயநீதியும்,  உலகத்தின் ஆவியும் தான் நம்மை ஆளுகை செய்கிறது.

‘ஆமென்’ 

Leave a comment