
“அந்தம் நடுவிரல் ஆதி சிறுவிரல்
வந்த வழிமுறை மாறி உரைசெய்யும்
செந்தமி ழாதி தெளிந்து வழிபடும்
நந்தி இதனை நவம்உரைத் தானே”.
என்று திருமூலர் தம் திருமந்திரத்தில் ஒவ்வொருவரின் வலது கையில் ‘சிவாயநம’ எவ்வாறு அடங்கியுள்ளது என்று கூறியுள்ளார். அவ்வாறே தைத்திரியோ உபநிஷத்தில் ‘பிரம்மசக்தி’ ஒவ்வொருவரின் வலது கைகளில் கர்மமாக அதாவது செயலாக உள்ளதாகவே உணர்ந்து வழிபடவேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

அது போன்றே வலது கையின் பின்புறத்தில் உள்ள விரல்களின் வடிவத்தை நாம் சிந்தித்துப் பார்த்தால், அது அல்லாஹ்வின் பெயரை வரைந்துள்ளது என்பது ஆச்சரியமாக நமக்குத் தெரியும்.

அறிவில்லாதவன் கடவுளாக மாற விரும்புவதால் அதை அடைவதில்லை, அதே சமயம் ஞானி பரமாத்மாவை விரும்பாமலே அனுபவிக்கிறான். அஷ்டவக்ர கீதை 18:37
‘விருப்பம்’ என்பது தன்னிடம் இல்லாத ஒன்றை, தனக்கு அந்நியமான ஒன்றை அடையவேண்டும் என்ற எண்ணமே. “அந்த பரம்பொருள் எவ்வுருவு கொண்டதோ அவ்வுருவுவாகவே உள்ளது, ஏனெனின் தன்னை வெளிபடுத்திக் கொள்வதற்காக!” என்பது பிரகதாரண்யக உபநிடத வாக்கு. அவ்வகையில் கடவுளாக மாற விரும்பும் அறிவில்லாதவன் வடிவாகவும் அப்பரம்பொருளே உள்ளதால், அதை அறியாதவன் இறுதிவரை அடைவதில்லை.
அதே சமயம் அந்த பரம்பொருள் வடிவே தம் வடிவும் என்பதை அறிந்த ஞானிக்கு ‘விருப்பம்’ என்னும் எண்ணம் எழவே எழாது. அத்தகைய ஞானியின் விரும்பாத அவ்வுணர்வில் அனுபவம் மட்டுமே வெளிப்பட்டுக் கொண்டிருக்கும்.
ஸ்ரீ குருப்யோ நமஹ🙏🏿

