“மகிழ்வித்து மகிழ்”

பிரபஞ்சம் ஒரு முழுமையான தனித்துவமான நிறுவனம். எல்லாம் மற்றும் அனைவரும் சில கண்ணுக்கு தெரியாத சரங்களுடன் பிணைக்கப்பட்டுள்ளனர். யாருடைய இதயத்தையும் உடைக்காதே; உன்னை விட பலவீனமாக பார்க்காதே. உலகின் மறுபக்கத்தில் ஒருவரின் துக்கம் முழு உலகத்தையும் துன்பப்படுத்தலாம்; ஒருவரின் மகிழ்ச்சி முழு உலகையும் சிரிக்க வைக்கும்.

 ~ஷாம்ஸ் ஆஃப் தப்ரிஸி, சூபிஞானி

அந்த கண்ணுக்கு தெரியாத சரம் எது?

இவ்வுலகில் எத்துணை கோடி மனிதர்கள் எத்துணை முகங்களுடன் இருந்தாலும் ஒவ்வொருவர் உள்ளும் சுவாசம் என்பது மட்டும் கண்ணுக்கு தெரியாத ஆனால் ஒரே தன்மையில் ஓடிக்கொண்டேயிருக்கும். ஒவ்வொரு மூச்சுக்கும் மாறாத ஒலி உள்ளது. அதுவும் கண்ணுக்கு தெரியாத தன்மையில் ஒவ்வொரு மூச்சுடன் ஒருங்கிணைத்து ஓடிக்கொண்டேயிருக்கும். அதுவே சரம், அந்த “சப்தசரம்”  மூலமே அனைத்து மனிதர்களும் ஆனால் அறியாமையிலேயே பிணைக்கப்பட்டுள்ளனர்,

உலகம்’ என்பது அவரவர்களின் உருவமேயன்றி அந்நியமாக வேறு எதுவும் இல்லை. எனவே ஒருவர் மற்றொருவரின் இதயத்தை உடைக்கும்போது அல்லது தன்னைவிட பலவீனமாக பார்க்கும் போது, அதனால் உருவாகும் துக்கம், எவ்வாறு சுவற்றில் அடித்த பந்து அடித்தவர்களிடமே திரும்பி வருவதுபோல், “சப்தசரம்” வழியே அவர்களிடமே திரும்பி வரும். அப்போது அவர்கள் அனுபவிக்கும் துக்கம் முழு உலகமாக, அதாவது அவர்களது முழுஉருவம் முழுவதும் பரவி அவர்களையே காயப்படுத்திக் கொண்டேயிருக்கும். 

மாறாக ஒருவர் மற்றவர் இதயத்தை மகிழ்சியாக ஆக்கினால், “சப்தசரம்” வழியே அதுவும் அவர்களிடமே திரும்பிவரும். அவர்களது இதயம் அனுபவிக்கும் மகிழ்ச்சி முழு உலகமாக, அதாவது அவர்களது  முழுஉருவம் முழுவதும் பரவி அவர்களையே மகிழ்வித்துக் கொண்டேயிருக்கும். 

ஞானானந்தம்’ என்னும் திருக்கோவிலூர் மகான் இந்த அனுபத்தை தம் ஒரே வரியில் “மகிழ்வித்து மகிழ்” என்று சொல்லியுள்ளார். அதாவது மகிழ்வித்தால் அதுவே மகிழும் சப்தமாகவும், துன்பப்படுத்தினால் அதுவே துன்புறும் சப்தமாகவும் “சப்தசரம்” வழியே அவரவர்களின் உருவமாகிய உலகினுள்ளேயே இடைவிடாது ஒலிக்கும்.

‘சப்தசரம்’ என்பது தமிழ் மொழி. ‘நூல்’ என்றும் அழைக்கப்படும் ‘சரம்’, எல்லா உயிர்களிலும் வியாபித்திருக்கும் முழுமையான சப்தத்தைத் தொடுத்தது. சக்தி வாய்ந்தவர்கள், இது அக்ஷரம் என்று பகர்வார்கள். ஆதியில் வார்த்தை இருந்தது என்று பைபிளில் சொல்லியுள்ளது போல், இது தெய்வீக ஒலியின் வார்த்தை.

ஸ்ரீ குருப்யோ நமஹ🙏🏿

Leave a comment