யான்’ என்பது ஒருமையில் பன்மை கலந்த சொல் எனக்கொள்ளலாம். பிரபஞ்ச ஆற்றலின் அதாவது ஸத்குருவின் அருளறிவும், வைராக்கிய சிஷ்யனின் மெய்யின் அதாவது உடம்பின் அறிவும் இணைந்த தன்மையே ‘யான்’ என்னும் ‘True Self’ ன் வெளிபாடாகும்.
அதாவது அறியாமையில் ஒருவர் தம் உடம்பை மட்டுமே ‘தமது இருப்பாகா’ கருதும் வரை மனதில் எண்ணங்கள் ‘நான்’ என்னும் அகங்காரத்துடனேயே வெளிப்பட்டு கொண்டிருக்கும். தூய அறிவில் ‘ஸத்குருவும், தாமும் ஒரே இருப்பாகா’ உணரும் போது, அதாவது இருவிதமான இருப்புக்களை தம்முள் ஓர் இருப்பாவே உணரும் போது, அதுவரை மனதை ‘நான்’ என்னும் அகங்காரத்துடன் ஆக்கிரமித்துக் கொண்டிருந்த ஒருமை தன்மை இயல்பாகவே மறைந்து, ‘நாம்’ என்ற தெய்வீகம் கலந்த பன்மை தன்மையாக அதே மனதில் இருந்து வெளிப்பட்டுக் கொண்டே இருக்கும்.
“அன்பையும் விளைவித்து அருட்பே ரொளியால்
இன்பையும் நிறைவித்து என்னையும் நின்னையும்
‘ஓர்உரு’ ஆக்கியான்” என்று வள்ளல் பெருமானும் தாம் பெற்ற இந்த பன்மை அனுபவத்தை பாடலாக தம் அகவலில்(1570) வெளிப்படுத்தியுள்ளார்.
“தெளிவு குருவுருச் சிந்தித்தல் தானே” என்பது திருமூலரின் திருமந்திர வாக்கு. அதாவது ஒருவர் தமது உருவையே, தம் குருவுருவாக நோக்கினால் அதுவே ‘True Self’, அவ்வாறு நோக்கும் திறன்’ இல்லாமல் போனால் அல்லது குன்றி போகும் போது, அத்தகையவர்களின் உருவை, மாயை என்னும் மனமானது தனது எண்ணங்களின் வலிமையால் தமது உடம்பாக மட்டுமே கருதும்படி, சதா வைத்துக் கொண்டே இருக்கும். அதுவே False-Self.
ஸ்ரீ குருப்யோ நமஹ🙏🏿

