“Interpretation of the Good Morning message”

Chandramouli (Srivastam)
very good morning to all srivatsam vasigal : Anything is valuable
in two situations. : before getting it.. . after losing it…. In between we do not
realize its value.

Interpretation:
சத்தியமான வசனம்:
Situation before getting it..,
அரியது கேட்கின் வரிவடி வேலோய்
அரிதரிது மானிடர் ஆதல் அரிது
ஒளவையார் அருளியது:
பற்பல பிறவிகளுக்குப் பிறகே கிடைத்தற்கரிய மானிடப் பிறவியை ஒருவன் அடைகிறான். அது மிகவுயர்ந்த பூரணத்துவத்தை அடைவதற்கான வாய்ப்பை வழங்குகிறது. இது மனிதனாக பிறப்பதற்கு முன் ஒவ்வொருவருக்கும் உள்ள மிக அரிய நிலைமை…

Situation after losing it..,
அவ்வாறு அரிதிலும் அரிதாக கிடைக்கப்பெற்ற இம்மானுடப்பிறவியில் வாழ்ந்து கொண்டும், இவ் பூரணத்துவத்தை பற்றிய அறிவை உணராது போனால், மரணம் அல்லது‘தவறிப்போனார்‘ என்னும் சம்பவமாக, இம் மானுடஉடம்புடன் உயிர் கொண்டிருந்த நட்பானது நழுவிப்போக, அதாவது மனிதப் பிறப்பாக கிடைத்த அரிய வாய்ப்பை தவறவிட்டதை எண்ணி எண்ணி நொந்து கொண்டிருக்கும்…

In between we do not
realize its value..,
அதாவது இழந்தவனுக்குத்தான் அதன் அருமை புரியும், ஆனால் எதை இழக்கப் போகிறோம் என்றே தெரியாமல் வாழ்ந்து கொண்டிருக்கும் வாழ்ந்து கொண்டிருக்கும் மனிதர்களுக்கு, அவர்களின் மதிப்பு உணரப்படாமலேயே இருந்து கொண்டிருக்கும்..

Leave a comment