அருட்பெருஞ்ஜோதி 🙏 தனிப்பெரும் கருணை 🙏

ஸ்ரீமத் பகவத் கீதை அத்தியாயம் 9: ஸ்லோகம் 4,5&6,
“அவ்யக்த மூர்த்தியாகிய என்னால் ஜகத் யாவும் வியாபிக்கப்பட்டிருக்கிறது பூதங்கள் என்னிடத்தில் இருக்கின்றன. ஆனால் நான் அவைகளிடத்தில் இல்லை.

பூதங்கள் உண்மையில் என்னிடத்து நிற்பவைகளல்ல. என்னுடைய ஈஸ்வர யோக மகிமையைப் பார்!
பூதகணங்களை ஆக்கவும் காக்கவும் செய்கிற என் சொரூபம் அவைகளிடத்தில் இல்லை.

எப்பொழுதும் எங்கும் சஞ்சரிக்கின்ற பெருங் காற்று வானத்தில் நிலைபெற்று இருப்பது போன்று பூதங்கள் எல்லாம் என்னிடத்தில் இருக்கின்றன.”

Interpretation:
பூமி’ என்பது நிலம், நீர், காற்று நெருப்பு என்னும் நான்கு பூதங்களின் கலவையால் உருவாகி, ஆகாசத்தால் தாங்கப்பட்டு கொண்டும், தன்னைத்தானே சுற்றிக்கொண்டும் இருக்கிறது. அவ்யக்த மூர்த்தியாகிய ஆகாசமானது தன்னுடைய அளப்பரிய சக்தியால் மற்ற நான்கு பூதங்களின் கலவையைக் கொண்டு மானுட தேகம் உட்பட எண்ணற்ற வடிவங்களை, அதனுள் உயிர் வித்தாகவும் இருந்து கொண்டு, இப் பூமியில் உருவாக்கியும், அழித்தும், மீண்டும் உருவாக்கியும் கொண்டிருக்கிறது.

“அது அசைகிறது, அசைவதில்லை” -என்பது ஈஷாவாஷ்ய உபநிஷத் வாக்கியம்.
இவ்வாறான பூமி இடைவிடாது சுழல்வதன் மூலம் அசைந்து கொண்டே இருக்கிறது. அது போன்றே பூமியில் தோன்றியுள்ள கண்களுக்கு புலப்படும் மற்றும் புலப்படாத எண்ணற்ற வடிவங்களும் பூமியுடன் சேர்ந்தே இடைவிடாது அசைந்து கொண்டிருக்கிறது. எனினும் பூமியை தாங்கிக் கொண்டிருக்கும் அவ்யக்த மூர்த்தியாகிய ஆகாசம் அசைவதில்லை. அது போன்று இப் பூமியில் உள்ள எண்ணற்ற வடிவங்களில் உள்ளுறைந்திருக்கும் உயிர் வித்தாகிய அவ்யக்த மூர்த்தியாகிய ஆகாசமும் அசைவதில்லை. எனினும் ஏகாத்மாவின் வெவ்வேறு நிலைகளே அசைவும், அசைவற்ற தன்மையும். அதாவது அவ்யக்தமும், வ்யக்தமும் ஒன்றே!

அசையும் நிலை அனைத்தும் ஐன்ஸ்டீனின் சூத்திரத்திற்கு இணங்க சொல்லப்படும் Matter that has a Mass என்றும், அசையா நிலை என்பதை Energy என்றும் பொருள் கொள்ளலாம். அதாவது Matter and Energy both are same.

“பூமியும் ஆகாசமும் அன்னமும் அன்னாதமும் ஆகின்றன. (எது உண்கின்றதோ அது அன்னாதம் எது உண்ணப்படுகிறதோ அது அன்னம்) பூமியில் ஆகாசம் ஒடுங்கி நிற்கும். ஆகாசத்தில் பூமி ஒடுங்கி நிற்கும்… இவ்வாறாக அன்னம் அன்னத்தில் நிலைபெறுகிறது”, என்று தைத்திரீயோ உபநிஷத்தில் சொல்லப்பட்டுள்ளது.

பூமியில் நான்கு பூதங்களின் கலவையால் தோன்றியுள்ள ஒவ்வொரு மானுட தேகமும் ஆகாசத்திற்கு அன்னம் ஆகிறது. எனவே ஐன்ஸ்டீனின் சூத்திரபடி மானுட தேகத்தை நிறை(mass) என்று கொண்டால், உண்ணும் ஆகாசம் ஆற்றல் (Energy) ஆகிறது.

ஐன்ஸ்டீனின் சூத்திரமான E= mc2 சொல்வது,
“ஆற்றல் ஒளியின் வேகத்தின் நிறை மடங்குக்கு சமம்.” மிக அடிப்படையான நிலையில், ஆற்றல் மற்றும் நிறை (பொருள்) ஒன்றுக்கொன்று மாறக்கூடியவை என்று சமன்பாடு கூறுகிறது; அவை ஒரே பொருளின் வெவ்வேறு வடிவங்கள். சரியான நிலைமைகளின் கீழ், ஆற்றல் நிறையாக மாறும், மற்றும் நேர்மாறாகவும்.
அவ்வகையில் ஆற்றல் (Energy) வடிவான ஆகாசமும், ஒளியின் வேகத்தின் நிறை (mass) மடங்கான மானுட தேகமும் ஒன்றிலோன்று ஒடுங்கும்.

இதற்கு, ஆற்றல் (Energy) வடிவான வெட்ட வெளியில், ஒளியின் வேகத்தின் நிறை (mass) மடங்கான வள்ளல் பெருமானின் தேகம் ஒன்றிலோன்று ஒடுங்கி, அனைத்து உயிர்களுக்குள்ளும் அருட்பெருஞ்ஜோதியாக ஒளிர்ந்து அருள் பாலித்துக்கொண்டிருப்பதை எடுத்துக்காட்டாக கொள்ளலாம்.

அதுபோன்றே யாவரும் ஒளியால் தம் உருவை(mass) இடைவிடாது தியானிக்கும் போது,
“போற்றிநின் பேரருள் போற்றிநின் பெருஞ்சீர்
ஆற்றலின் ஓங்கிய அருட்பெருஞ் ஜோதி”
என்று அகவல்:1593ல் சொல்லியுள்ள படி அருட்பெருஞ் ஜோதியின் ஆற்றல்(energy) ஒவ்வொருவர் உள்ளிருந்தும் ஓங்குவதை உணரலாம்.

அருட்பெருஞ்ஜோதி 🙏 தனிப்பெரும் கருணை 🙏

Leave a comment