“உங்கள் மௌனத்துடன் பேசுங்கள்”
குறிப்பிற் குறிப்புணர் வாரை உறுப்பினுள்
யாது கொடுத்தும் கொளல். குறள்:703
எவரொருவர் தன் உடம்பின் பேசும் திறன் மூலம் தம் உயிரின் மௌனத்தோடு குறிப்பால் பேச வல்லவர், அவ்வாறே உயிரின் மௌனம் குறிப்பால் தம் உடம்புக்கு உணர்த்துவதையும், குறிப்பால் அறியப்பெற்றவர்,
அத்தகையவரை உடம்பில் உள்ள மற்ற உறுப்புக்கள் யாவும் தம்மையே கொடுத்து, “உள்ளம் பெருங்கோயில் ஊனுடம்பு ஆலயம்” என்று திருமூலர் தம் திருமந்திரத்தில் சொல்லியபடி,
அவ் ஊனுடம்பை ஆலயமாகவும், அவ் உள்ளத்தை பெருங்கோயிலாகவும் ஆக்கிக் கொண்டுவிடும்.
வாழ்கதமிழ் 🙏🏿வாழ்கவள்ளுவம்🙏🏿

