
தேர்வு, வாய்ப்பு அல்ல, உங்கள் விதியை தீர்மானிக்கிறது. – அரிஸ்டாட்டில்
விளக்கம்:
“இந்த மனிதப் பிறப்பைப் பெற நீங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டீர்கள்.சற்று யோசித்துப் பாருங்கள்: உங்கள் தந்தையின் விந்தணுக்களில் இருந்து உருவான மில்லியன் கணக்கான உயிரணுக்களில், ஒரு சிறந்த கருணையாளர் அழியாத நிலையை அடைய உங்கள் தாயின் வயிற்றில் மனித வடிவத்தை எடுக்க உங்கள் ஓர் உயிரணுவைத் தேர்ந்தெடுத்தார்.”
மேற்கூறிய உண்மையை கருத்தில் கொண்டால் ஒவ்வொரு உயிருக்கும் கிடைக்கப்பெற்ற மனிதன் பிறவி என்பது, இறைவனால் தேர்வு செய்து கிடைக்கப் பெற்ற ஓர் அரிய வாய்ப்பே ஆகும். எனினும் இத்தகைய அரிய வாய்ப்பை, அவ்வாறு பிறந்த மனிதர்கள் தாங்களே தேர்வு செய்துகொள்வது என்பது இயலாத ஒன்று.
இத்தகைய அரிதிலும் அரிதான வாய்ப்பைப் பெற்ற மனிதர்களுக்கு இடைவிடாமல் தொடர்ந்து கிடைத்துக் கொண்டிருக்கும் அந்தந்த நொடிப் பொழுதுகளை வாய்ப்பு என கருதாமல், தேர்வாக கருதி செயல்பட்டால் தங்களின் விதியை தாங்களே நிர்ணயித்துக் கொள்ளலாம்.
எனினும் அடுத்த நொடிப்பொழுது என்பது எவருக்கும் நிரந்தரம் அல்ல! அதாவது ஒவ்வொருவருக்கும் கிடைக்கும் அடுத்தடுத்த நொடிப் பொழுதுகள் அனைத்தும் வாய்ப்பே. அவ்வகையில் வாய்ப்பே விதியை தீர்மானிக்கிறது.
எனினும் அவ்வாறு வாய்ப்பாகவே கிடைக்கும் அடுத்தடுத்த நொடிப்பொழுதுகளையும் கூட, தேர்வாக எண்ணி செயல்பட்டால் தங்களின் விதியை தாங்களே நிர்ணயித்துக் கொள்ளலாம்.
ஆக, ஒவ்வொருவருக்கும் கிடைக்கப்பெற்ற மனிதப்பிறப்பு என்பது ஒர் வாய்ப்பாகவும், அதில் உருவாகும் நிகழ்கால தருணங்கள் ஓர் தேர்வாகவும், வருங்கால தருணங்கள் என்பது மீண்டும் ஒரு வாய்ப்பாகவும், அதுவே நிகழ்கால தருணமாக மாறும்போது தேர்வாகவும், ஒவ்வொருவரின் வாழ்விலும் மாறிமாறி வந்து கொண்டிருக்கிறது.
இறுதியாக, தேர்வு செய்யப்பட்டது தம் மனிதப்பிறப்பு, அதுபோன்று தேர்வு என்பதே தம் பிறப்புரிமை என்று மட்டுமே எண்ணி செயல்பட்டால் விதியை மதியால் வெல்லலாம்!
ஒத்த தறவோன் உயிர்வாழ்வான் மற்றையான்
செத்தாருள் வைக்கப் படும். (குறள்:214)
என்னும் திருவள்ளுவரின் திருக்குறள்படி,
இத்தகையோரே மனிதப்பிறவியாக கிடைத்த வாய்ப்பை தவறவிட்டு தவறிப்போனவர்கள், அதாவது இறந்துபோனவர்கள் என்னும் பட்டியலில் வைக்கப்படாமல், தேர்வு செய்து தேர்ச்சிப் பெற்றவர்கள் என்னும் அருளாளர்களின் பட்டியலில் சேர்க்கப்படுவார்கள்.

