
“Space and time are within you.”
விழிப்பு நிலையில் ஒவ்வொருவரின் உடம்பும் சுவாசம் மற்றும் எண்ணங்கள் இவற்றால் ஆக்கிரமிக்கப்படுகிறது. அந்நிலையில் ‘காலமும் வெளியும்’, அத்தேகத்தின் அளவே உணரப்படும். ஆழ்ந்த உறக்க நிலையில் ‘வெளியானது’ அளவற்றதாகி போய்விடுகிறது அந்நிலையில் சுவாசம், எண்ணங்கள், உடல், மற்றும் காலம் இவை அனைத்தும் உணரப்படாத நிலையாகவே இருக்கும்.
“கணக்கிடப்படும் வெவ்வேறு அளவுகள், பார்வையாளரின் திசைவேகத்தைப் பொறுத்தே அமையும். குறிப்பாக, காலமும் வெளியும் விரிந்தோ சுருங்கியோ இருக்கலாம். வெளியும் காலமும் ஒருசேரவே கணக்கில் எடுத்துக்கொள்ளப்படவேண்டும்; ஒன்றைப் பொறுத்து மற்றொன்று அமையும்”. என்பது ஐன்ஸ்டீனின் பொது சார்புக் கொள்கை.
இந்த சார்புக் கொள்கையை ஒத்தே, ஒருவரின் உடல் விழிப்பு நிலையை சார்ந்திருக்கும் போது ஏற்படும் ‘கால வெளி’ அளவும், அதே உடல் உறக்க நிலையை சார்ந்து இருக்கும்போது உருவாகும் ‘கால வெளி’ அளவும் சுருங்கியும் விரிந்தும், அதாவது அளவுடையதாகவும் அளவற்றதாகவும் உணரப்படுகிறது.
ஐன்ஸ்டீனின் சிறப்புச் சார்புக் கோட்பாடு:
1.ஒளியின் வேகம் மாறாத் தன்மை- கவனிப்பவர்களுடைய சார்பு வேகம் எதுவாக இருப்பினும், அவர்கள் எல்லோருக்கும் ஒளியின் வேகம் ஒன்றே.
2.எந்தவொரு சடத்துவக் குறியீட்டுச் சட்டத்திலும் இயற்பியல் விதிகள் ஒன்றே. சார்பு நிலையில் துகள் ஒன்றுடன் இயங்கிக் கொண்டிருக்கும் ஒருவருக்கும், சோதனைச் சாலையில் நிலையாக இருக்கும் ஒருவருக்கும் இயற்பியல் விதிகள் ஒன்று என்பதே இதன் பொருள்.
அதுபோன்றே ஒருவரின் விழிப்பு மற்றும் உறக்கம் சார்ந்த நிலைகளுக்கு ஆதாரமாக விளங்கிக் கொண்டிருக்கும் ஆத்ம ஒளித் துகள்களில் எந்த ஒரு வேறுபாடும் ஏற்படாது. அதாவது இயங்கிக் கொண்டிருக்கும் விழிப்பு நிலையில் உணரப்படும் உணர்வும், இயக்கமற்ற உறக்க நிலையில் உணரப்படும் உணர்வும் ஒன்றே ஆகும்.
அதற்கடுத்து இரண்டு அணுக்கருக்கள் ஒன்றோடு ஒன்று இணையும் போது அளப்பரிய ஆற்றல் உருவாகும் என்பதும், அதாவது E = mc2 என்னும் பொருளை ஆற்றலாக மாற்றும் ஐன்ஸ்டினின் கொள்கை. இதில் E என்பது சக்தி, m என்பது பொருளின் நிறை, c என்பது ஒளியின் வேகம்.
பகவத்கீதையில் ஸ்ரீகிருஷ்ணர்
அத்தியாயம் -6 ,தியானயோகம்– ஸ்லோகம்-17
“அளவுடன் கர்மங்கள் செய்து உறக்கத்திலும் விழிப்பிலும் முறைமை (தொடர்பு,link) வகிப்பவனுடைய யோகம் துன்பத்தை (பிறவி சூழலை) துடைப்பதாகிறது“ என்னும் வழிமுறையை உபதேசிக்கிறார்….
அதாவது ஒன்றுக்கொன்று தொடர்பு இல்லாமல் இருக்கும் உறக்கம் மற்றும் விழிப்பு நிலைகளை முறையான யோகத்தால் அதாவது முறையான மந்திர ஒலிச்சக்தியால் தொடர்பை ஏற்படுத்தினால், (c2) ஆத்ம ஒளியுடன் (m)உடலின் நிறையும் இணையும் போது (E) அளப்பரிய ஆற்றல் உருவாகும்.
அதாவது “கால வெளி” என்பது உணரப்படும் ஒன்று அன்று! நீயே அதுவாகவே இருக்கிறாய் என்பதே பொருள். இத்தகையயோகம் சத்குருவின் அருளால் சித்திக்கின் துரியநிலை என்னும் அரியநிலையை அடைந்து சாக்காடு செல்லாத வீடுபேறு அடையலாம்.
இத்தகைய அளப்பரிய ஆற்றலை தம்முள் உணர்ந்து கண்ட ஒரு சிலரின் வெளிப்பாடுகள்:
1.“தூங்கற்க தூங்காது செய்யும் வினை”. -திருவள்ளுவர்
2.“உறங்கு வதுபோலுஞ் சாக்காடு உறங்கி
விழிப்பது போலும் பிறப்பு“.
3.“தூங்காமல் தூங்கி சுகம் பெறுவது எவ்வாறு- பத்ரகிரியார்
4.“துரியம் கடந்த இத்தொண்டர்க்குச் சாக்கிரம்
துரியமாய் நின்றது என்று உந்தீபற
துறந்தார் அவர்கள் என்று உந்தீபற“.
-திருவியலூர் உய்யவந்த தேவ நாயனார்
5.“தூங்கிக் கண்டார் சிவலோகமும் தம் உள்ளே
தூங்கிக் கண்டார் சிவயோகமும் தம் உள்ளே
தூங்கிக் கண்டார் சிவபோகமும் தம் உள்ளே
தூங்கிக் கண்டார் நிலை சொல்வது எவ்வாறே”.
திருமூலர் திருமந்திரம்:
6..“வெட்ட வெளிதன்னை மெய்யென் றிருப்போர்க்கு
பட்டய மேதுக்கடி குதம்பாய் பட்டய மேதுக்கடி”.
-குதம்பை சித்தர்
7.“எப்பாலுமாய் வெளிஎல்லாம் கடந்து மேல் அப்பாலும் ஆகிய அருட்பெருஞ்ஜோதி”,(137)-வள்ளலார்
8..Ramana Maharishi says, “The space is within you.” The body takes up space, but you do not.
ஸ்ரீ குருப்யோ நமஹ🙏

