
“என்றென்றும் வாழும் கலை”
“இந்த மனிதப் பிறப்பைப் பெற நீங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டீர்கள்.”
சற்று யோசித்துப் பாருங்கள்: உங்கள் தந்தையின் விந்தணுக்களில் இருந்து உருவான மில்லியன் கணக்கான உயிரணுக்களில், ஒரு சிறந்த கருணையாளர் அழியாத நிலையை அடைய உங்கள் தாயின் வயிற்றில் மனித வடிவத்தை எடுக்க உங்கள் உயிரணுவைத் தேர்ந்தெடுத்தார். இவ்வாறு நினைவு கூறுபவர், அரிதிலும் அரிதாக கிடைக்கப்பெற்ற இம்மானுட தேகத்தை, தனது ஓர் உயிர் அணுவிற்க்கு நிரந்தர வாசஸ்தலமாக ஆக்கிக்கொள்ளும் கலை எதுவோ அதைகற்று, அழியாப்பெருநிலை எய்துவார்கள்.
“உடலில் துவக்கிய வேடம் உயிர்க்கு ஆகா
உடல் கழன்றால் வேடம் உடனே கழலும்
உடல் உயிர் உண்மை என்று ஓர்ந்து கொள்ளாதார் கடலில் அகப்பட்ட கட்டை ஒத்தாரே” என்பது திருமூலரின் திருமந்திரச் சொல்.
இவ்வாறு உடல் உயிர் உண்மை என்று அறிவிக்காத ஏனைய கலைகளை ஒருவர் பலரிடமிருந்து பலகாலமாக கற்றாலும், முடிவில் கற்பித்தவர் மற்றும் கேட்டவர் என இருவருக்கும் ஏமாற்றமே பரிசாக கிட்டும்.
தைத்திரீயோபநிஷத்: சீக்ஷாவல்லீ: 3.3
வித்தையை பற்றிக் (கூறுமிடத்து) – ஆசாரியன் முதல் (எழுத்து) வடிவம்;
சிஷ்யன் பின் (எழுத்து) வடிவம், வித்தை சந்திக்குமிடம்;
உபதேசம் சந்தியைச் செய்விப்பது;
இங்கு ஆசாரியன் என்று குறிப்பிடப்பட்டுள்ளது ஆத்ம சொரூபத்தையே ! இதுவே ஒவ்வொரு மானுட தேகத்திலும் ‘இருக்கு(yes)’ என்னும்அழியாத உயிர் வித்தாகவும், எழுத்து வடிவமாகவும் அமைந்திருக்கிறது.
சிஷ்யன் என்பது ஒவ்வொரு மானுட வடிவமும் ஆகும். இதுவும் ‘இல்லை(No)’ என்னும் அழியும் தன்மை கொண்ட எழுத்து வடிவமாகவே அமைந்திருக்கிறது.
அரிதிலும் அரிதான இம்-மானுடப் பிறப்பு கிடைக்கப்பெற்ற ஒவ்வொருவரும் தம்மை வெறும் உடம்பாக மட்டுமே உணராமல், இந்த ‘இருக்கு மற்றும் இல்லை, Yes and No’ எழுத்து வடிவங்களின் மூலம் தம் உயிரும் உடலும் இணைந்த மெய்ப்பொருளாக தன்னை அறிய முற்பட்டால்,
முதல் எழுத்து “இருக்கு, Yes” என்னும் வடிவமான ஆசாரியன் மற்றும் பின் எழுத்து “இல்லை, No” என்னும் வடிவமான சிஷ்யன் இவைகளின் கூட்டுறவால் “இருக்கிறது, Yes” என்னும் நிரந்தர வித்தை உதயமாகும் (வித்தை என்பதற்கு ஆன்மாவிற்கு பேரறிவை கொடுக்கும் தத்துவம் என்று பொருள்).
இவ்வாறு உயிர் ஒர் எழுத்தாகவும் மெய் ஓர் எழுத்தாகவும் உள்ளதை அறிவிப்பவர் எவரோ அவரே “எழுத்து அறிவித்தவன் இறைவன் ஆகும்”
“எண்ணென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும்
கண்ணென்ப வாழும் உயிர்க்கு…”
திருக்குறள்:392
‘எண்ணும் எழுத்தும் கண்ணெனத் தகும்’ -ஔவையார்
இவ்வாறு மனிதப்பிறவி கிடைக்கப்பெற்ற உயிர்,உடம்பை எழுத்தாக அறிவித்தவரை தம் ஒரு கண்ணில் எண்ணங்களாகவும், மற்றொரு கண்ணில் வித்தையாகவும்
அவ் எழுத்தையும் பொருத்தி வாழும் உயிர்களுக்கு, எவ்வாறு கண்கள் இரண்டாயினும் பார்வை மட்டும் ஒன்றாகவே இருக்குமோ…
அவ்வாறே கண்களாக இருக்கும் எண்ணங்களும், எழுத்தும் இணைந்து ஒன்றாக,அவைகளின் வழியே உயிரும்,உடம்பும் ஒன்றாகி வள்ளல்பெருமானை போன்று மரணமில்லாப் பெருவாழ்வு கிட்டும்.
அவ்வாறு எண்ணும் எழுத்தும் கண்களில் இல்லாதவர் உடம்பில் இருக்கும் உயிர், மரணகாலத்தில் உடம்பை விட்டு பிரிந்து, “கடலில் அகப்பட்ட கட்டை ஒத்தாரே”
என்று திருமூலர் பாடியுள்ளது போன்று, அதாவது எவ்வாறு “கடலில் அகப்பட்ட கட்டை” அலைஅடிக்கும் திசைகள் எல்லாம் மாறிமாறி போய்க்கொண்டே இருக்குமோ…
அவ்வாறே உண்மையான என்றென்றும் வாழும்கலையை அறியப்பெறாத உயிர்கள், வெவ்வேறு உடம்புகளில் மாறிமாறி புகுந்துகொண்டு பிறவி என்னும் பெருங்கடலில் அங்கும் இங்குமாக அலைகழிக்கப் பட்டுக் கொண்டு, அதே சமயத்தில் அரிதிலும் அரிதாக தமக்கு முன்பு கிடைத்த மனிதப்பிறவியின் மாண்பையும் அந்த சந்தர்ப்பத்தை நழுவவிட்ட அல்லது தவறவிட்ட தன் அறியாமையையும் எண்ணி எண்ணி நொந்துகொண்டு சாகும் உயிர்களாக, பிறவிப்பெருங்கடலை நீந்த முடியாமல் அங்குமிங்குமாக மிதந்து கொண்டேயிருக்கும்.
ஸ்ரீ குருப்யோ நமஹ:🙏🏿

