You Are That!- “Capable of changing command”

 /பழமையான, குறுகிய சொற்கள்- “ஆம்” மற்றும் “இல்லை” ஆகியவை மிகவும் சிந்திக்க வேண்டியவை./

-பிதாகரஸ் என்னும் கிரேக்க கணித ஞானியின் கூற்று. 

இயற்கையிடமிருந்து ‘இருக்கு மற்றும் இல்லை’ எனும் இரு விதமான கட்டளைகள் சப்த வடிவில் இடைவிடாது வெளிப்பட்டுக் கொண்டேயிருக்கிறது. உலகில் உள்ள அனைத்து உயிரினங்களும் இந்த சப்தத்திலிருந்து தோன்றியவைகள் தான். ஆனால் உயிர்கள் தோன்றிய பின்பு, தோற்றத்துக்கு அப்பால் விளங்கிக் கொண்டிருக்கும் இந்த சப்த அதிர்வுகளை அறியாமல், தாம் தோற்றமாக கொண்ட வடிவங்களாக மட்டுமே தம்மை கருதிக்கொண்டு, அதனதன் தன்மைகளுக்கு ஏற்ப தம்மை வெளிப்படுத்திக் கொண்டுமிருக்கிறது. 

ஒவ்வொரு உயிரினங்களிலும் ‘உளது எதுவோ அது இருக்கு என்னும் கட்டளையாகவும் இலது எதுவோ அது இல்லை என்று கட்டளையாகவும்’  வெளிப்பட்டுக் கொண்டிருக்கிறது. 

உதாரணமாக பசு ஆடு போன்ற உயிரின வகைகளில் பால் சொரியும் தன்மையாகவும், பறவை போன்ற இனங்களில் முட்டையிடும் தன்மையாகவும், மரங்கள் மற்றும் செடிகளில் இருந்து காய்கனிகள் போன்ற தன்மைகளாகவும் உள்ளது, ‘இருக்கு’ என்னும் கட்டளையையாகவும், 

இத்தகைய அதனதன் தன்மைகள் அவைகளிடம் அற்றுப்போகும் போது, இவ் உயிரினங்களில்  ‘இல்லை’ என்னும் கட்டளையாகவும் இருக்கிறது. உதாரணமாக மாமரம் என்றால் அதில் மாங்கனிகள் வெளிப்படாது போயின் அது பட்டுப்போன மரமாக ஆகிவிடுவது போன்று.

இயற்கையால் நிர்ணயம்  செய்யப்பட்ட  இத்தகைய ‘இருக்கு மற்றும் இல்லை’ என்னும் கட்டளைகளை நீட்டிக்கும் உரிமையை எந்த ஜீவராசிக்கும் இயற்கை அளிக்கவில்லை. இம்மானிட வடிவம் ஒன்றுக்கு மட்டும் தான் விதிவிலக்காக அளித்திருக்கிறது. அதாவது பிறந்தால் இறந்தாக வேண்டும் என்னும் நியதியாக இருக்கும் கட்டளையை, “வள்ளல் பெருமானை போன்று இறைவா நிலை அடைந்து…”

‘இருக்கு’ மற்றும் ‘இல்லை’ என்ற கட்டளையை ‘இருக்கிறது’ என்ற நித்திய கட்டளையாக நீட்டிக்க இயற்கை மனிதகுலத்திற்கு மட்டும் ஒரு அரிய மற்றும் தனித்துவமான வாய்ப்பை வழங்கியுள்ளது.

பண்டைய கிரேக்க தத்துவஞானியும் கணிதவியலாளருமான பித்தகோரஸ், பித்தகோரஸ் தேற்றம் என்ற தனது கணிதக் கோட்பாட்டின் மூலம் இந்த உண்மையை விவரித்துள்ளார்.

இரண்டு சதுரங்களின் பகுதிகளின் கூட்டுத்தொகை (a மற்றும் b) நீட்டிக்கப்பட்ட (c) சதுரத்தின் பரப்பளவிற்கு சமம்.
a2+b2=c2
a2=1*1=1= எண் 1 ஆனது உருவாக்கம் மற்றும் இருக்கு என்னும் அதிர்வுகள் மற்றும் பண்புகளுடன் எதிரொலிக்கிறது.
b2=0*0=0= பூஜ்யம், ஒரு நேர்மையான கார்டினல் எண், ஒன்றுமில்லாதது மற்றும் இல்லை என்பது பற்றிய கருத்துகளுடன் இணைக்கப்பட்டுள்ளது.
(a2+b2=1+0)=c2=1= ‘இருக்கு’ மற்றும் ‘இல்லை’ என்ற வர்க்கமூலம் ‘இருக்கிறது’ என்று அழியாததாகிறது.

திருச்சிற்றம்பலம்🙏

Leave a comment