
“தூங்கிக் கண்டார் சிவலோகமும் தம் உள்ளே
தூங்கிக் கண்டார் சிவயோகமும் தம் உள்ளே
தூங்கிக் கண்டார் சிவபோகமும் தம் உள்ளே
தூங்கிக் கண்டார் நிலை சொல்வது எவ்வாறே”.
திருமூலர் திருமந்திரம்:
ஒருவர் தூங்கும் போது அவர் காணும் கனவு காட்சிகள் யாவும், அக்கனவை காணும் அவர்தம் ஸ்தூல சரீரத்துக்குள்ளேயே அடங்கியிருக்குமே அன்றி, தூங்கிக் கொண்டிருக்கும் அவரின் ஸ்தூல தேகம் காணும் அக்காட்சிகளைப் பின்பற்றி எங்கும் வெளி கிளம்பி செல்லாது.
அதுபோல ஒருவர் விழித்திருக்கும் நிலையில் தம் தியான யோகத்தில் காணும் காட்சிகள் என்பது, தூங்கி கனவாக காட்சியை காண்பதற்கு பதிலாக, காட்சிகளை காண்பதற்காகவே தூங்குவதற்கு ஒப்பாகும்
அவ்வாறு விழித்திருந்து, தியானம், தியானிக்கப்படும் பொருள், தியானிப்பவர், என்னும் பாகுபாடுகள் அற்ற நிலையில் ஒருவர் தியானிக்கும் போது, மெய்மறந்து போன அந்நிலையில், அவர்தம் உருவில் உள்ளிருந்து தெய்வீக ஆற்றலாக வெளிப்படும் காட்சிகள் யாவையும், அத்தகையவர் தமக்கு அந்நியமாக இல்லாமல், ஆனால் அனைத்தும் தம்முள்ளேயே வெளிப்படும் ஆற்றலாக உணரும்போது, அதாவது விழித்திருந்து தியானிக்கும் அந்நிலையையே, மெய்மறந்த தம் தூங்கும் நிலையாக உணரும்போது, பிரபஞ்சக் காட்சிகள் மற்றும் உடல், அதாவது அண்டம் பிண்டம் என்னும் வேறுபாடுகள் மறைந்து, முழு பிரபஞ்ச அம்சங்களும் சிவலோகம், சிவயோகம், சிவபோகம் மற்றும் கற்பனை கூட செய்ய முடியாதவைகளை தம் உடலுக்குள் உணர முடியும்.
மேலும் தூங்கிக் கண்ட அந்நிலையில் அருளப்பட்ட பேரின்பம் நிறைந்த காட்சிகளை வேறு எவரிடமும் சொல்லவோ அல்லது பகிர்ந்து கொள்ளவோ இயலவே இயலாது.
இந்நிலை கைவரப்பற்ற சித்தர் பெருமான் பத்ரகிரியார், ” “தூங்காமல் தூங்கி சுகம் பெறுவது எக்காலம்” என்றும், வள்ளுவர் பெருமான் தம் திருக்குறளில், “தூங்கற்கதூங்காது செய்யும் வினை” என்றும் வர்ணித்து உள்ளார்கள்.
திருச்சிற்றம்பலம், 🙏
He slept and found Shivaloka inside him.
He slept and found Shiva Yoga inside him.
He slept and found Shivapogam inside him.
How can you describe the state of being asleep?
Thirumoolar Thirumantram:
Interpretation:
Just as all of the scenes that appear in a dream are contained within the dreamer’s image, so in the waking state, when one perceives the scenes emanating from his image as not foreign to his image but as created within his image,that is, when the waking state is perceived as the sleeping state, the universe scenes and the body, that means the cosmic energy and the body differences disappear and the entire universal aspects can be felt within the body as Shivaloka,Shiva Yoga, Shivapogam, and unimaginable. And just eternal bliss alone will remain at that stage!
“Nothing emanates from me.”. This is stated in the Ashtavakra Gita, Chapter 20.
Sri Gurubhyo Namaha 🙏🏿

