ஏகாதசி விரதம் ஒரு இயற்கை விருந்து;

‘ஏகம்’ என்பது சமஸ்கிருதத்தில் “ஒன்று, ஒற்றை, தனி”. அல்லது ஸர்வோத்தமன் என்று அழைக்கப் படும் ஹரியே ஒவ்வொரு மானுட தேகத்திலும் ஏகாத்மாவாக அதாவது உயிர் வித்தாக குடிகொண்டிருக்கிறார். அவர் சமுத்திரத்திற்கு நிகரானவர். அதில் உள்ள எண்ணற்ற தோன்றி மறையும் அலைகளே ஒவ்வொரு மானுட தேகமும், அதாவது ஒவ்வொரு அலைகலும் ஒவ்வொரு நீர் துளியே!

ஒவ்வொரு மானுட தேகமும் முக்கியப்பிராணன் , அபானன், வியானன், உதானன், சமானன், நாகன், கூர்மன், கிருகரன், தேவதத்தன், தனஞ்செயன் என்னும் தசவாயுக்களால் ஜீவாத்மாக கட்டமைக்கப் பட்டு இயங்கிக் கொண்டிருக்கிறது.

அதாவது ஏகாத்மாவான பரமாத்மாவை, தசம வாயுக்களால் ஆன ஜீவாத்மா சென்றடைவதற்கான உபாயமே ஏகாதசி விரதம். ‘ஏகாதச’ என்றால் ஒன்று மற்றும் பத்தின் கூட்டான, பரமாத்மா ஜீவாத்மா ஐக்கியமாமான பதினொன்று.

தைத்திரியோ உபநிஷத்தில் இவ்வாறு கூறப்பட்டுள்ளது, அன்னத்தை இகழக் கூடாது. அது விரதம், (எது உண்ணப்படுகிறது அது அன்னம் எது உண்கின்றதோ அது அன்னாதம்) பிராணனும் சரீரமும் அன்னமும் அன்னதாமும் ஆகின்றன. பிராணனிடம் சரீரம் ஒடுங்கி நிற்கும் சரீரத்தில் பிராணன் ஒடுங்கி நிற்கும் இவ்வாறாக அன்னம் அன்னத்தில் ஒடுங்கி நிற்கின்றது. எவன் இங்ஙனம் அன்னம் அன்னத்தில் நிலைபெறுவதை அறிகின்றானோ அவன் நிலையான பதவியை எழுதுகிறான்.

ஆக ஒவ்வொரு தேகத்திற்கும் முதன்மை உணவாக எப்போதும் இருந்து கொண்டிருப்பது முக்கியபிராணன் தான். நீர் மற்றும் திட உணவுகள் அதன் பிறகே ஆகின்றன. ஏகாதசி அன்று உபவாசம் மேற்கொள்ளும் போது நீர் மற்றும் திட உணவுகள் மட்டுமே தவிர்க்கப்படுகின்றன. அன்னாளில் ஹரி ஸ்மரணையோடு இயங்கும் முக்கியபிராணன் மட்டுமே முழு உணவாக ஆகின்றது. அதன் மூலம் பிரபஞ்ச சக்தியும் தேகத்தில் மற்ற கலப்பட உணவுகள் ஏதும் இல்லாததால்,உடம்பின் வழியாக தச வாயுக்களுக்கும் பரவி, உடம்பின் உள்ளே ஊடுருவி நிற்கும் ஹரியாகிய பரமாத்மாவை எளிதில் சென்றடைந்து விடும்.

இவ்வாறாக ஜீவாத்மா பரமாத்மா ஐக்கியம் என்பது ஏகாதச உபவாசம் இருக்கும் அனைவருக்கும் இயல்பாகவே கிடைக்கப் பெற்றுக் கொண்டிருக்கிறது. மேலும் பிரபஞ்ச சக்தியின் மிகைப்பட்ட சக்தி முக்கியபிராணன் வழியே அந்நாளில் உபவாசம் இருக்கும் தேகத்திற்கு பரிபூரணமாக கிடைப்பதால், ஏகாதசி திதி அன்று மற்ற திரவ, திட உணவுகளை தவிரப்பதால் மட்டும் அதை விரதம் என்று கொள்ளாது, நச்சு தன்மைகளை நீக்க முக்கியப் பிராணனை மட்டுமே இயற்கை உணவாக உண்ணும் நாள் ஏகாதசி என்றுகொள்ளலாம். மேலும் உபநிஷத் வாக்கின்படி அன்னத்தை (பிராணனை) இகழாமல் ஹரி சிந்தனையோடு உட்கொள்ளப்படுவதால் அது விரதமும்,விருந்தும் என ஒரு சேர ஆகின்றது.

முடிவான ஏகாதசி உபவாசபலன் எதுவெனில், ‘நீ என்னை நோக்கி ‘ஏகம்’ என்னும் ஓர் அடி எடுத்து வைத்தால் நான் உன்னை நோக்கி ‘தசம்’ என்னும் பத்து அடி வருவேன்’ என்று ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மா கூறியுள்ளது போல,

ஒரு துளி சமுத்திரத்தில் கலப்பது போல, ஏகமான பரமாத்மாவை நோக்கி பிரபஞ்சசக்தி தசம வாயுக்கலவையான தேகத்தின் வழியே ஓர் அடி வைக்கும்போது, சமுத்திரம் ஒரு துளியில் கலப்பது போல், ஏகம் (பரமாத்மா) தசம வாயுக்கலவையான ஜீவாத்மாவை நோக்கி பத்துஅடி வந்து, கலந்து, அழியாத பிரபஞ்ச ஆற்றலாக ஆக்கிவிடும்.

ஸ்ரீ குருப்யோ நமஹ🙏🏿

Leave a comment