
“He who knows himself simultaneously (both his body and soul) knows his Lord,” said Hadith.
Everyone is solely conscious of their body since they have no understanding of the soul. God’s knowledge must shine within a person in order for him to understand both his body and his soul. When God’s knowledge rises inside him, he becomes conscious of his body and soul in that light, which then becomes wisdom.
In other words, the distinctions between knowledge and its object to be known vanish, and knowledge and its object merge into one. That is, before acquiring knowledge, the body and life were two separate entities, but after becoming one through the grace of divine knowledge, they too became knowledge.
“உங்களை அறிவது உங்கள் கடவுளை அறிவதாகும்.”
“தன்னை ஒரே சமயத்தில் (உடல் மற்றும் ஆன்மா இரண்டையும்) அறிந்தவன் தன் இறைவனை அறிவான்” என்று ஹதீஸ் கூறுகிறது.
பொதுவாக எவரொருவரும் எல்லா நேரத்திலும் தன் உடலை மட்டுமே அறியப்பெற்றவர்களாக இருப்பார்கள் ஏனெனில் தன் ஆன்மாவைப் பற்றிய அறிவு ஏற்படாததால் . அவ்வாறு ஒருவன் தன் உடலையும் உயிரையும் சேர்த்து அறிவதற்கு, இறை அறிவு அவனுள்ளே பிரகாசிக்கவேண்டும். அவ்வாறு இறையறிவு அவனுள்ளேயே உதிக்கும்போது, அவ் அறிவொளியில் தன் உடலையும் உயிரையும் ஒன்றுசேர அறியப்பெற்று, பின்பு அவைகளும் அறிவு மயமாகவே ஆகிவிடுகிறது.
அதாவது அறிவு வேறு, அறியப்படும் பொருள் வேறு என்ற வேறுபாடுகள் மறைந்து, அறிவு, அறியப்படும் பொருள் என்னும் இவ்விரண்டும் ஒன்றாக, அதாவது அறிவதற்கு முன்புவரை இருவேறு பொருளாக இருந்த உடல் உயிர், அறிவின் அருளால் ஒன்றென அறியப்பட்ட பின்பு அவைகளும் அறிவுமயமாகவே ஆகிவிடுகிறது.
அறிவை அறிவால் அறிந்தே அறிவும் அறிவுதனில்
பிறிவுபட நில்லாமல் பிடிப்பதுஇனி எக்காலம் ? 192
இது பத்ரகிரியாரின் மெஞ்ஞான புலம்பல்.
-அறிவை: உடல் மற்றும் ஆன்மா பற்றிய அறிவை,
-அறிவால் அறிந்தே : தன்னுள்ளேயே இருக்கும் இறையறிவால் அறிந்தே,
-அறிவும் அறிவுதனில்: அவ்வாறு அறியப்பெற்ற பின்பு உடல், ஆன்மா,இறைவன் எல்லாமே அறிவுமயமாகவே இருப்பதை அறிந்த அறிவுதனில்,
-பிறிவுபட நில்லாமல் : அறிவு, அறியப்படும் பொருள்,அறிபவன் என்று தனித்தனியாக மீண்டும் பிறிவுப்பட்டு நிற்காமல்,
-பிடிப்பதுஇனி எக்காலம் ? எல்லாமே அறிவுமயமாகவே ஆகிவிட்ட அறிவுதனை பிடித்தபடியே இருப்பது எக்காலம் ? என்று நம் பொருட்டு இம்மெஞ்ஞானத்தை அடைந்த பத்ரகிரியார் புலம்பும் பாடல் இது.
வள்ளல் பெருமானின் அருட்பெருஞ்ஜோதி அகவல்:
பிறிவுற்று அறியாப் பெரும்பொரு ளாய்என்.
அறிவுக்கு அறிவாம் அருட்பெருஞ்ஜோதி. (113)
பிறிவேது இனி உனைப் பிடித்தனம் உனக்குநம் அறிவே வடிவெனும் அருட்பெருஞ்ஜோதி”(285)
திருச்சிற்றம்பலம் 🙏🏿

