“தஞ்சமளிக்கும் திருவடி”

“திருவடியே சிவமாவது தேரில்
திருவடியே சிவலோகஞ் சிந்திக்கில்
திருவடியே செல்கதியது செப்பில்
திருவடியே தஞ்சம் உள் தெளிவார்க்கே.”
:திருமூலர் திருமந்திரம்

‘தேரி’ என்பதற்கு மணல்குன்று என்று பொருள் உள்ளது. ஒவ்வொரு மானுட தேகமும் மண்ணினால் ஆன மணல் குன்றே ஆகும். அத்தகைய தேரில் சிவமாவது குடியிருக்க வேண்டுமெனில்…

‘திருவடி’ என்பதில் ‘திரு’ என்பதற்கு தெய்வத்தன்மை என்றும் ‘வடி’ என்பதற்கு காற்று என்றும் பொருள் உள்ளது. அதுவே, அதாவது ‘வடி’ என்னும் இக்காற்றே ‘உயிர் மூச்சாகி’, ஒவ்வொரு மானுட தேகத்தையும் வாழவைத்துக் கொண்டிருப்பதால், அதுவே ‘திரு’ என்னும் தெய்வத்தன்மையுடன் பொருந்தி திருவடியாக மாறுமேயானால்…அதுவே, அதாவது திருவடியே ‘தேரில்’ இவ்வுடம்பில் எங்கும் சிவமயமாய் அதாவது பிராண சரீரமாக இருப்பதை உணரலாம்.

‘தேகம் சிவாலயம்’ என்பது உபநிஷத் வாக்கு. அதாவது இவ்வாறு திருவடியே சிவமாக இருப்பதை உணரப்பட்ட தம் தேகத்தையே, சிவலோகமாக, சிவாலயமாக,

“சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்(கு)
அபாயம் ஒருநாளும் இல்லை – உபாயம்
இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம்
விதியே மதியாய் விடும்.” என்று நல்வழி-15ல் அவ்வை சொல்படி இடைவிடாது சிந்தித்தால்…

அச்-சிந்தனையே ‘மதியாகி’ அதுவே ‘செல்கதிக்கு’ (கதி என்பதற்கு வீடுபேறு மற்றும் பரகதி என்று பொருள் உள்ளது) செல்லும் ‘சொல்லாகி’ நிற்கும் என்பதை தம்முள் உணர்ந்து தெளிவடைந்தவர்கே, திருவடி தஞ்சம் அளிக்கும். அல்லாத வெல்லாம், இவ்வாறு உள் தெளிவு பெறாத ஏனையோர்கெல்லாம் ‘விதியே (மரணமே) மதியாய் விடும்’.

திருச்சிற்றம்பலம் 🙏

Leave a comment