
காஷ்மீர் ஷைவிசம் அல்லது த்ரிகா ஷைவிசம் , 850 CE க்குப் பிறகு காஷ்மீரில் தோன்றிய ஷைவ – ஷக்த தந்திரத்தின் ஒரு மதமற்ற இந்து பாரம்பரியமாகும் . இந்த பாரம்பரியம் காஷ்மீரில் தோன்றியதால் இது பெரும்பாலும் “காஷ்மீரி ஷைவிசம்” என்று அழைக்கப்படுகிறது.
(திரிகா)Trika என்னும் சமஸ்கிருத வார்த்தைக்கு : மூன்று அல்லது மூன்று பாதைகள் சந்திக்கும் இடம் என்றும் ஒரு பொருள்உள்ளது. காஷ்மீர் ஷைவிசத்தின் கருத்து “சிவன், சக்தி மற்றும் நரன்” இவற்றின் திரிகா அறிவியல் ஆகும். பரா, பராபர மற்றும் அபரா ஆகிய மூன்று ஆற்றல்களிண்இணைப்பு. Trika தத்துவம் சொல்லிய ‘சிவம், சக்தி மற்றும் நர’ என்னும் இம்மூன்றையும், திருமூலர் தம் திருமந்திரத்தில் “ஊன் பற்றி நின்ற உணர்வுறு மந்திரம்” என்னும் ஒரே வரியில் இணைத்துள்ளார். நர:ஊன், சக்தி; உணர்வு, சிவம்; மந்திரம், இவ்வாறு ‘உணர்வுறு மந்திரம் ஊன் பற்றி நிற்கும்’ போது…
பரா; உயர்ந்த, பராபர; இரண்டும், அபரா;ஒன்றுமில்லை என்று பொருள் கொண்டால், ஒருவரின் விழிப்பு நிலையில் இருக்கும் முழுமையான உணர்வு, கனவு நிலையில் இருந்தும் இல்லாமலும் இருக்கும் உணர்வு, ஆழ்ந்த உறக்க நிலையில் ஏதுமில்லாமல் மறைத்திருக்கும் உணர்வு, என்று இம்மூன்று நிலைகளாக இருக்கும் சக்தியுணர்வுகள், சிவம் என்னும் மந்திர மூச்சில் (வாசியில்) ஒன்றாக கோர்க்கப்பட்டு, நர என்னும் இவ்-ஊனில் முறையாக கட்டப்பட்டால்…
“யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்” என்னும் திருமந்திர வரிகளுக்கேற்ப திருமூலர் பெற்ற இன்பத்தை இவ்வையத்தில் உள்ள அனைவரும் பெறலாம்.
திருச்சிற்றம்பலம் 🙏

