திருவாசகம்-வானாகி மண்ணாகி

”வானாகி மண்ணாகி வளியாகி ஒளியாகி

ஊனாகி உயிராகி உண்மையுமாய் இன்மையுமாய்

கோனாகி யானெனதென் றவரவரைக் கூத்தாட்டு

வானாகி நின்றாயை என்சொல்லி வாழ்த்துவனே”

:திருவாசம் 

 

வானம் என்பதற்கு ‘உயிரோடு இருக்கை’ என்று பொருள் உள்ளது. அதாவது ‘உயிரோடு இருக்கை’ என்பது உருவங்கள் ஏதும் இல்லாத ‘ஒன்றுமில்லாத விழிப்புணர்வை’ குறிப்பது.

ஒவ்வொரு மனிதனின் உள்ளடக்கமும், 84 தாதுக்கள், 23 தனிமங்கள் மற்றும் 8 கேலன் நீர் 38 டிரில்லியன் செல்களாக பரவியுள்ளது. ஒவ்வொரு மானுட வடிவமும், உட்கொண்ட பூமியின் உதிரி பாகங்களால், ‘வானாகி நின்ற ஒன்றுமில்லாத விழிப்புணர்வால்’ கட்டமைக்கப்பட்டுள்ளது.

 அதாவது திருவாசகத்தில் மாணிக்கவாசகர் சுவாமிகள் அருளியபடி மனிதர்களாய் பிறப்பதற்கு முன்பு, புல்லாகியும், பூண்டாகியும், புழுவாகியும், மரமாகியும், பல மிருகங்களாகியும், பறவையாகியும், பாம்பாகியும், கல்லாகியும்,   பேயாகியும், பூத கணங்களாகியும், வலிய அசுரராகியும், இயங்குகின்ற, இந்த, தாவர சங்கமத்துள் – அசையாப் பொருள் அசையும் பொருள் என்னும் இருவகைப் பொருள்களுள்ளே, எல்லாப் பிறப்பும் பிறந்து பிறந்து இறந்து, மறுசுழற்சி செய்து, சிதைந்த பகுதிகளை  உட்கொண்ட பூமியின் உதிரி பாகங்களால்…

இப்பூமியின் மிகவும் ஆசீர்வாதமான உயிரினமான மனிதனாக “வானாகி நின்றாயை என்சொல்லி வாழ்த்துவனே” என்னும் திருவாசகச் சொல்படி, ‘வானாகி’ நின்ற ‘ஒன்றுமில்லாத விழிப்புணர்வால்’ மீண்டும் உருவாக்கப்படுகிறது.

“எல்லாப் பிறப்பும் (மனித பிறப்பு உட்பட) பிறந்திளைத்தேன் எம்பெருமான்.        மெய்யேயுன் பொன்னடிகள் கண்டின்று வீடுற்றேன்.”       :திருவாசகம் 

நீங்கள் பூமியில் வாழவில்லை, நீங்கள் அதைக் கடந்து செல்கிறீர்கள்.” என்பது சூபி ஞானி ஹஜ்ரத் ரூமியின் வாக்கு.

அதாவது பூமியின் உயரிய அம்சமாக மனிதனாக பிறப்பெடுத்த   இப்பிறப்பையும் கடந்து, உண்மையான, காணப் பெறாத பொன்னடிகளுக்கு ஒப்பான ‘வானாகி நிற்கும் ஒன்றுமில்லாத விழிப்புணர்வை’, ஆதியும் அந்தமும் இல்லா அருட்பெருஞ்ஜோதியை  கண்டு, வீடு பெறுதலே மனிதனாக இறைவனால் உருவாக்கப்பட்டதின் குறிக்கோள் ஆகும்.

திருச்சிற்றம்பலம் 🙏

Leave a comment