:திருமூலர் திருமந்திரம்

“உடம்பார் அழியின் உயிரார் அழிவர்
திடம்பட மெய்ஞ்ஞானம் சேரவும் மாட்டார்
உடம்பை வளர்க்கும் உபாயம் அறிந்தே
உடம்பை வளர்த்தேன் உயிர் வளர்த்தேனே”
“உடம்பை வளர்க்கும் உபாயம் அறிந்தே
உடம்பை வளர்த்தேன் உயிர் வளர்த்தேனே”
மனித உடல் சுமார் 30 டிரில்லியன் உயிரணுக்களால் ஆனது, அவை கூட்டாக வாழ்க்கையின் அத்தியாவசிய செயல்பாடுகளைச் செய்கின்றன. உயிரணுக்கள் அவற்றில் இருக்கும் பல கரிம மூலக்கூறுகளின் உதவியுடன் இந்த உயிர்காக்கும் பணிகளைச் செய்ய முடியும். இந்த கரிம மூலக்கூறுகள் உயிர் மூலக்கூறுகள் என்று குறிப்பிடப்படுகின்றன.
சுவாசம் எனப்படும் செயல்முறை மூலம் உடலுக்குள் இழுக்கப்படும் ஆக்சிஜனின் உதவியுடன் உண்ணும் உணவுப் பிரிந்து கார்பன் டை ஆக்சைடாகவும், ஆற்றலின் வெளியீட்டுடன் நீராகவும் உடைக்கப்படும்போது உயிர் அணுக்களுக்கு உரிய சக்தி கிடைக்கிறது.
எனவே சுவாசமே ஒவ்வொரு மனிதனுக்கும் எந்நேரமும் உட்கொள்ளப்படும் முதன்மையான உணவாக இருக்கிறது என்பதை முறையாக உணர்ந்து, அஃதினை சக்தியாகவே சுவாசித்தால், உயிர் அணுக்களில் சிவம் எனும் ஆற்றல் உற்பத்தியாகி உயிராக வளர அதன் மூலம் உடம்பும் வளரும்.
“உடம்பார் அழியின் உயிரார் அழிவர்
திடம்பட மெய்ஞ்ஞானம் சேரவும் மாட்டார்”
அதாவது ஒவ்வொரு மனித உடம்பும் எண்ணற்ற உயிர் அணுக்களின் கூட்டே தவிர உடம்பு என்று உயிருக்கு அந்நியமாக ஏதும் இல்லை. ஆகவே தான் திருமூலர் உடம்பு அழியும் போது உயிரும் அதனுடன் சேர்ந்து அழிகிறது என்று கூறுகிறார். உடம்பையும் உயிரையும் தனித்தனியாக கருதுவோருக்கு, உடம்பையும் உயிரையும் சேர்க்கும் வலிமையான மெய்ஞ்ஞானம் கிட்டாமல் போக…
அதன் காரணம் உட்கொள்ளப்படும் சுவாசத்திலும் சக்தியற்று போவதால், உயிர் அணுக்களின் ஆற்றலும் (சிவமும் ) சிறிது சிறிதாக தேய்ந்து பின் இல்லாமலே போய்விடும்.
திருச்சிற்றம்பலம் 🙏

