“மாறுகொண்ட ஹூவிலே மடிந்ததே சிவாயமே”.

Consciousness (Pure Shivam) sleeps in minerals, dreams in plants, wakes up in animals, becomes self aware in humans.” —Rumi.

If someone repeatedly invokes the Pure Shivam as his consciousness in all three light states of sleeping, dreaming, and wakefulness with the sound of Hu (“Hu” means invoking in Sanskrit), the consciousness that exists in minerals, plants, and animals becomes self-aware in him and immortal for ever.

Sri gurubhyo namaha🙏🏿

“உச்சியும் காலையும் மாலையும் ஈசனை

நச்சுமின் நச்சி நமவென்று நாமத்தை

விச்சிமின் விச்சி விரிசுடர் மூன்றினும்

நச்சுமின் பேர்நந்தி நாயகன் ஆகுமே“.

திருமூலர் திருமந்திரம்: 1850

“உச்சியும் காலையும் மாலையும் ஈசனை”

சிவாயநம என்னும் நாமத்தால்…

“நச்சுமின் நச்சி” திரும்பத் திரும்ப உள்முகமாக,

“விச்சிமின் விச்சி ” மிகைபட்ட தகுதியில் (ln multiple times),

‘ஹூ’  என்னும் சப்த நாதத்தால் (‘ஹூ’  என்பதற்கு அழைத்தல் என்று வடமொழியில் பொருள் உள்ளது),

“விரிசுடர் மூன்றினும்” விழிப்பு கனவு உறக்கம் என்னும் மூன்று நிலைகளிலும் விரிந்த சுடராக பிரகாசித்துக் கொண்டிருக்கும் ஒளியில்,

“நச்சுமின்” இடைவிடாது அணுகிக்கொண்டே இருந்தால்…

“ஆறுகொண்ட வாரியும் அமைந்துநின்ற தெய்வமும்

தூறுகொண்ட மாரியும் துலங்கிநின்ற தூபமும்

வீறுகொண்ட போனமும் விளங்குமுட் கமலமும்

மாறுகொண்ட ஹூவிலே மடிந்ததே சிவாயமே”.

(369) என்னும் சிவவாக்கிய சித்தர் வாக்கின்படி…

‘சிவாயநம’ என்ற சிவாயத்தின் வெளிப்புறத்தின் அழிக்கும் தன்மை என்பது மறைந்து போக, காக்கும் தன்மை கொண்ட  சிவஜோதியாய்  உட்புறத்தில்  வெளிப்பட …

“பேர்நந்தி நாயகன் ஆகுமே” நந்தி போன்று பேர் கொண்ட சிவகணங்களில் ஒன்றாய் ஆகலாம்.

திருச்சிற்றம்பலம் 🙏🙏🙏

Leave a comment