
Taittiriya Upanishad: Siksa Valli: 3.3
“Now with regard to knowledge, The Guru is the prior form of font and the disciple is the later form of font; skillful knowledge is their meeting place, and teaching is the connector. This is with regard to knowledge”
Guru is referred to as Atma Swaroopam in this context! This is the written form of the life seed that exists in every human being. Every person is a disciple. This is also in written form.
If everyone who has been given this rare human birth seeks to know himself as a combination of soul and body through these written forms rather than as a mere body alone,
The union of the first letter form, Guru, and the later letter form, Shishya, generates skillful knowledge that will lead to philosophy that gives enlightenment to the soul.
It means that when the vowels of the soul and the consonants of the body are combined, it creates the vowels of life consonants, which will give skilled knowledge to find out the true attributes of soul and body and reach out to teach others.
Thus, “He who declares the letter is Lord,” i.e., the one who knows and delivers that the soul is one letter and the body is one letter.
தைத்திரீயோபநிஷத்: சீக்ஷாவல்லீ: 3.3
வித்தையை பற்றிக் (கூறுமிடத்து) – ஆசாரியன் முதல் (எழுத்து) வடிவம்;
சிஷ்யன் பின் (எழுத்து) வடிவம், வித்தை சந்திக்குமிடம்;
உபதேசம் சந்தியைச் செய்விப்பது;
இங்கு ஆசாரியன் என்று குறிப்பிடப்பட்டுள்ளது ஆத்ம சொரூபத்தையே ! இதுவே ஒவ்வொரு மானுட தேகத்திலும் உயிர் வித்தாகவும் எழுத்து வடிவமாகவும் அமைந்திருக்கிறது.
சிஷ்யன் என்பது ஒவ்வொரு மானுட வடிவமும் ஆகும். இதுவும் எழுத்து வடிவமாகவே அமைந்திருக்கிறது.
அரிதிலும் அரிதான இம்-மானுடப் பிறப்பு கிடைக்கப்பெற்ற ஒவ்வொருவரும் தம்மை வெறும் உடம்பாக மட்டுமே உணராமல், இந்த எழுத்து வடிவங்களின் மூலம் ஆன்மாவும் உடலும் இணைந்ததாகத் தன்னை அறிய முற்பட்டால்,
முதல் எழுத்து வடிவமான ஆசாரியன் மற்றும் பின் எழுத்து வடிவமான சிஷ்யன் இவைகளின் கூட்டுறவால் வித்தை உதயமாகும் (வித்தை என்பதற்கு ஆன்மாவிற்கு பேரறிவை கொடுக்கும் தத்துவம் என்று பொருள்).
இவ்வாறு உயிர் எழுத்து மற்றும் மெய் (உடம்பு) எழுத்து இவைகளில் கூட்டுறவால் உருவான உயிர்மெய் எழுத்தால், மெய்ப்பொருளை காணும் அறிவு பெற்று, அஃது உபதேசமாக ஏனையோரையும் சென்றடையும்.
இவ்வாறு உயிர் ஒர் எழுத்தாகவும் மெய் ஓர் எழுத்தாகவும் உள்ளதை அறிவிப்பவர் எவரோ அவரே “எழுத்து அறிவித்தவன் இறைவன் ஆகும்”
எனவே, “எழுத்தை அறிவிப்பவர் இறைவன்”, அதாவது ஆன்மா ஒரு எழுத்து, உடல் ஒரு எழுத்து என்று அறிந்து வழங்குபவர்.
Sri Gurubhyo Namaha 🙏

