“ஐம்பது எழுத்தும்போய் அஞ்செழுத் தாமே”

“ஐம்பது எழுத்தே அனைத்தும்வே தங்களும்
ஐம்பது எழுத்தே அனைத்துஆக மங்களும்
ஐம்பது எழுத்தேயும் ஆவது அறிந்தபின்
ஐம்பது எழுத்தும்போய் அஞ்செழுத் தாமே”.
திருமூலரின் திருமந்திரம்: 965

மனிதர்கள் தம்முள் உள்ளிழுக்கும் ஒவ்வொரு மூச்சுக்களுமே, பிராணன், அபானன், வியானன், உதானன், சமானன், என ஐந்து வகையாக பிரிந்து, மெய் வாய் கண் காது மூக்கு என்னும் ஐம்புலன்களையும், உணர்தல் பேசுதல் பார்த்தல் கேட்டல் மற்றும் நுகர்தல் என்னும் ஐம்பொறிகளையும்
இயக்கிக் கொண்டிருக்கின்றது.

ஐம்பொறிகளும் ஐம்புலன்களும் கலந்து பத்து வகை இந்திரியங்களாகி, ஐந்து வகை பிராணங்களால் கூட்டுறவால் ஐம்பது வகைகளாக மனிதர்களுள்  விரிந்து தோன்றிய ஆறாவது அறிவின் வெளிப்பாடுகளே… வேதங்களும், ஆகமங்களும்.

‘சிவாய-நம’ என்பதே அஞ்செழுத் தாமே. இஃதினை வாசியில் (மூச்சில்) முறையாக பொருத்தி நிற்க கற்றால்?

ஆகமங்களும், வேதங்களும், ஐம்பது வகையான எழுத்துக்களை உள்ளடக்கிய மனித உருவும், ‘சிவாய-நம’  என்னும் இவ்-அஞ்செழுத்தில் ஒடுங்கி மறைந்து போகும்.

திருச்சிற்றம்பலம்🙏

Leave a comment