“நமச்சிவாயவே ஞானமும் கல்வியும்;
நமச்சிவாயவே நான் அறி விச்சையும்;
நமச்சிவாயவே நா நவின்று ஏத்துமே;
நமச்சிவாயவே நன்நெறி காட்டுமே“.
அப்பர் தேவாரம்:
இவ்வுலகில் உள்ள எல்லா ஞானங்களும், கல்விகளும் ‘நமச்சிவாய‘ என்னும் ஐந்தெழுத்து மந்திரத்தை அறிந்து கொள்வதற்காகவே அன்றி வேறல்ல! அவ்வாறு ஒருவர் இவ் ஐந்தெழுத்து மந்திரத்தை முறையாக அறிந்து ஓதி தெளிவடைந்தால்…
“உள்ளம் பெருங்கோயில் ஊனுடம் பாலயம்
வள்ளற் பிரானார்க்கு வாய்கோ புரவாசல்
தெள்ளத் தெளிந்தார்க்குச் சீவன் சிவலிங்கம்“
என்னும் திருமூலரின் திருமந்திரச் சொல்படி,
அவ்வாறு தெள்ளத் தெளிந்த அத்தெளிவில் அவர்களது ஜீவனே சிவலிங்கமாக, ‘நமச்சிவாய‘ என்னும் ஐந்தெழுத்து மந்திரமாகவே ஆகிவிட்டபடியால்… அவர் கற்ற எல்லா ஞானங்களும் கல்விகளும் அஃதினில், ஐந்தெழுத்து மந்திரமான ‘நமச்சிவாய‘ தில் மறைந்து, நமச்சிவாயம் ஒன்றே ஓங்கி நிற்கும்.
திருச்சிற்றம்பலம்🙏🙏🙏

.jpeg)
